அறிவியலின் வளர்ச்சியால் நாம் ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்களை கேள்விப்படுகிறோம். மருத்துவத்தில் அறிவியல் ஆராய்ச்சியின் பங்கு இன்றியமையாததாகின்றது.பல்வேறு விதமான நோய்க்களுக்கு , அதன் அறிகுறிகள் என்ன , அதற்கான மருந்துகள் என்ன என்பவற்றை கண்டுபிடிக்க ஆரய்ச்சிகள் பெருமளவில் உதவுகின்றன.
சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு குழுவினர் நடத்திய ஆய்வில், ஜிங்க் மாத்திரைகளை அதாவது துத்தநாகம் எடுத்துக் கொள்வதால் உடலில் புற்று நோய் உருவாக்கும் அணுக்களின் வளர்ச்சி தடைபடுவதாக கூறப்படுகிறது. இதனை பற்றிய விளக்கம் தான் இந்த தொகுப்பு.
யுனிவர்சிட்டி ஆப் டெக்சாஸ் நடத்திய ஒரு ஆய்வில், ஜிங்க் மாத்திரைகள் உணவு குழாய் புற்று நோய் பெருக்கத்தை கணிசமாக குறைப்பதாக கூறப்படுகிறது.
ஜிங்க் மாத்திரைகள் புற்று நோய் அணுக்களில் இருக்கும் தேவைக்கு அதிகமான கல்சியம் சிக்னல்களை தடுக்கிறது. இவை சாதாரண அணுக்களில் நடப்பதில்லை . புற்று நோய் செல்களை ஜிங்க் குறிப்பாக தடுப்பதை நம்மால் கணிக்க முடிகிறது.
உணவு குழாயின் மேற்புற அணுக்களுக்கு இந்த மாத்திரையா எந்த ஓரு விளைவும் ஏற்படுவதில்லை. புற்று நோயை உண்டாக்கும் அணுக்களின் வளர்ச்சி மட்டுமே கட்டுப்படுகிறது, என்று இந்த குழுவின் தலைவர் ஸுய் பான் கூறுகிறார். உணவுக்குழாய் புற்றுநோயின் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு இந்த கண்டுபிடிப்பு நல்ல ஒரு வழிகாட்டுதலாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கையுடன் கூறுகிறார்.
புற்று நோயால் பாதிக்கப்பட்ட பலருக்கும் ஜிங்க் சத்து குறைபாடு இருப்பது தெரிய வந்துள்ளது. பல மருத்துவ ஆய்வுகளும் , குறிப்புகளும் ஜிங்க் சத்தின் தேவை ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் ஏற்றது என்று கூறுகின்றன. புரதம் மற்றும் என்சைம்களில் ஜிங்க் ஒரு முக்கிய சத்தாக உணரப்படுகிறது. இதன் குறைபாடு , அணுக்களின் வளர்ச்சியை பாதிக்கும் என்று ஆய்வின் முடிவுகள் குறிப்பிடுகிறது.
ஜிங்க் குறைபாடு, புற்று நோயை உண்டாக்கும் அல்லது வேறு பல நோய்கள் ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு. கீரை வகை, ஆளி விதைகள், பூசணி விதைகள் , இறால் , கடல் சிப்பி போன்றவற்றில் அதிகமாக ஜிங்க் உள்ளது. இவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.
கல்சியம் மற்றும் ஜிங்க் ஆகிய இரண்டுக்கும் ஒரு விதமான இணைப்பு உள்ளது. அவை நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகின்றனவா அல்லது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்திகின்றனவா என்பதை பற்றிய ஆராய்ச்சியில் விரைவில் நல்ல தகவல்கள் நம்மை வந்து சேரும். இந்த இணைப்பின் தகவல் மூலம் நமக்கு பல நோய்களின் தடுப்பு மற்றும் சிகிச்சைகளின் வழிமுறைகள் எளிதாக கிடைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஆராய்ச்சிகளின் பலன், நாம் அவற்றை புரிந்துகொண்டு அதன் முடிவுகளுக்கு உட்பட்டு மாற்றங்களை கொண்டுவரும் போது தான் முழுமையான பலன் கிடைக்கின்றது. அதுவே அந்த ஆராய்ச்சியின் வெற்றியாகும். ஆகவே ஜிங்க் உணவுகளால் ஏற்படும் நன்மையை கருத்தில் கொண்டு அவற்றை தினசரி உணவில் சேர்த்து புற்று நோயை அகற்றுவோம்.
By: Tamilpiththan




