பிரபல பிரித்தானிய மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் இருவர், புறா எச்சத்தின்மூலம் பரவும் ஒரு நோயால் உயிரிழந்ததால், அந்த மருத்துவமனையில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
கிரிப்டோகாக்கஸ் என்னும் ஒருவித நோய்க்கிருமி பொதுவாக புறாக்களின் எச்சத்தில் காணப்படும்.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், ஹெச்.ஐ.வி தொற்று ஏற்பட்டவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு கொண்டவர்கள் மட்டுமே இந்த கிருமி ஏற்படுத்தும் நோயால் பாதிக்கப்படுவர்.
மற்றவர்கள் உடலில் இந்த கிருமி நுழைந்தாலும் அது அவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
இந்நிலையில் கிளாஸ்கோவிலுள்ள Queen Elizabeth மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இருவர் இந்நோய்க்கு பலியானதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையின் அவசர கால நோய்த்தடுப்பு குழுவினர் மேலும் இந்நோய் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கோண்டுள்ளனர்.
குழந்தைகள் உட்பட, இந்நோய் பரவலாம் என எதிபார்க்கப்படும் நோயாளிகளுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.