நீரிழிவை நெருங்க விடாமல் தடுக்க இந்த ஒரு பொருள் போதும்!

0

வேர்க்கடலையின் நன்மைகளைப் பற்றி நாம் பல காலங்களாக பேசிக் கொண்டே இருக்கிறோம்.

இதன் எடை குறைக்கும் தன்மையால், வேர்க்கடலை பல உணவு பொருட்களுக்கு மத்தியில் முக்கிய இடத்தைப் பெறுகிறது.

உயர் கார்போ உணவுகளுக்கு மாற்றாக வேர்க்கடலை மற்றும் வேர்க்கடலையால் தயாரிக்கப்பட்ட பொருட்களை உணவியல் வல்லுனர்கள் பரிந்துரைக்கின்றனர்.
எடை குறைய வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு அதிகம் தேவைப்படும்.
புரதம் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும், வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். நார்ச்சத்து உணவை விரைந்து ஜீரணித்து செரிமானத்தை மேம்படுத்துகிறது.

இதனால், நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு, மற்றும் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறது. இதனால் உங்கள் உணவுத் தேடல் குறைந்து, குறைவான உணவு உட்கொள்ளல் சாத்தியமாகிறது. இதனால் எடை குறைப்பும் சாத்தியமாகிறது.

இரத்த ஓட்டத்தில் கொழுப்பு மற்றும் சர்க்கரை படிவதால் நீரிழிவு மற்றும் தீங்கு விளைவிக்கும் நிலைமைகள் உண்டாகின்றன.

கார்போ மற்றும் கொழுப்புகள், இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிப்பதால், நீரிழிவு, உடல் பருமன், உயர் கொலஸ்ட்ரால் போன்ற பாதிப்புகள் உண்டாகிறது. இரத்த சர்க்கரை அளவை சமன் செய்யும் தன்மை வேர்க்கடலைக்கு உள்ளதால், இந்த நிலைமை தடுக்கப்படுகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபாவங்களை போக்குவதற்கு காசி ராமேஸ்வரம் யாத்திரை செல்லும் முறை தெரியுமா!
Next article25.10.2018 இன்றைய ராசிப்பலன் – ஐப்பசி 08, வியாழக்கிழமை!