புதிய காற்றழுத்த தாழ்வு: இலங்கை மற்றும் தென்னிந்தியாவை புரவி புயல் தாக்கும் அபாயம்!

0

புதிய காற்றழுத்த தாழ்வு: தென்கிழக்கு வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும் இது ஒரு சூறாவளியாக தீவிரமடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி எதிர்வரும் நாட்களில் அதாவது இன்று (சனிக்கிழமை) முதல் டிசம்பர் 4 ஆம் திகதி வரை இலங்கை மற்றும் தென்னிந்தியாவை குறித்த புரவி புயல் தாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

இதேவேளை நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும் எனவும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇலங்கை அரசாங்கம் டிசம்பரில் 700 மில்லியன் டொலர் கடனை சீனாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள தீர்மானம்!
Next articleதயாரிப்பாளரின் அதிரடி: பிரபல ஓடிடி தளத்திற்கு விற்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம்..