புகைப் பிடிப்பதால் உண்டாகும் பாதிப்பு குறைய இந்த ஒரு மூலிகையை தினமும் சாப்பிடுங்கள்!

0
374

கற்பூரவள்ளி ஒரு கிருமி நாசினி. இது பொதுவாக நமது நாட்டில் சளி, இருமலுக்கு தருவார்கள். கற்பூர வள்ளிச் செடியை வீட்டில் வளர்த்தால் சமயத்திற்கு உதவும். அதிக நீர தேவையில்லை. இது வெறும் கிருமிகளை சொல்வதற்கு மட்டுமல்ல , பல நோய்களுக்கும் மருந்தாகிறது.

ஜீரண சக்தியை தைகரிக்க, மந்தந்தன்மையை போக்க, வாயுத் தொல்லைக்கு என பல வகையில் இது பயன் தருகிறது. கற்பூர வள்ளி தரும் நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

ஆஸ்துமாவை கட்டுப்படுத்த !
ஆஸ்துமா குழந்தைகளிலிருந்து பெரியவர்களை பாதிக்கும் நோயாகும் குளிர்காலத்தில் மிகவும் பாதிப்பை தரும். ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக மூச்சிரைப்பு ஏற்படும். விடாது இருமலும் இம்சையை தரும். இவர்கள் தினமும் காலையில் கற்பூரவள்ளி இலையின் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து அருந்திவந்தால் ஆஸ்துமா படிப்படியாக கட்டுக்குள் வரும்.

புகைப் பிடிப்பவர்கள் !
புகைப்பிடிப்பவர்கள் அதிகம் நுரையீரல் நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இதே நாளடைவில் புற்று நோயாக மாறுகின்றது. இவர்கள் கற்புரவள்ளி இலையினை சாறெடுத்து அதை நன்கு சுண்டக் காய்ச்சி பாதியான அளவு எடுத்து வடிகட்டி அருந்தி வந்தால் புகையினால் உண்டான பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.

காச நோய்க்கு!
காசநோயால் உண்டான பாதிப்புகள் குறைய கற்பூரவள்ளி சிறந்த மருந்தாகும். கற்பூரவள்ளி இலையை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து அருந்தி வந்தால் காச நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும்.

இருமல் ,ஜலதோஷம் !
கற்பூரவள்ளி இலைகளை காயவைத்து பொடி செய்து அதனுடன் காய்ந்த தூதுவளை, துளசி பொடிகளை சம அளவு எடுத்து கலந்து எடுத்துவைத்துக் கொள்ளுங்கள். இதனை தினமும் காலை வேளையில் குழந்தைகளுக்கு1 ஸ்பூன் அளவு தேனில் குழைத்து கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல், ஜலதோஷம் காய்ச்சல் குறையும். இவற்றை வராமலும் தடுக்க முடியும். கற்பூரவள்ளியை அரைத்து தேனில் குழைத்து தந்தாலும் இருமல் அடங்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க !
சில குழந்தைகள் எப்போது நோய்வாய்ப்படுவார்கள். இவர்கள் ஊட்டம் பெற இந்த குறிப்பு உபயோகமானதாக இருக்கும். கற்பூர வள்ளி இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் காய்ந்த வேப்பிலை, துளசி இலை, தூதுவளை, நெல்லி, கீழாநெல்லி இவற்றை சம அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.

அதனுடன் சுக்கு, மிளகு, மஞ்சள்தூள், தனியா பொடி கலந்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக்கொண்டு தினமும் இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து நீரில் கொதிக்க வைத்து 3 வேளை குடிக்கலாம். இவ்வாறு அருந்தி வந்தால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

Previous articleவீட்ல யூஸ் பண்ற இந்த பொருட்கள்தான் தைராய்டு பிரச்சனைக்கு காரணம்னு சொன்னா அதிர்ச்சியாவீங்க!
Next articleசிறுநீரகம் மற்றும் இரத்தத்தை சுத்தம் செய்ய உதவும் அற்புத ஜுஸ் பற்றி தெரியுமா!