நரைமுடியை கருகருவென மாற்றும் பீர்க்கங்காய்! வேர்ப் பகுதியின் நிறத்தை மாற்றி இளநரையை போக்குகிறது!

0

நமது அழகில் மிகவும் முக்கிய பங்கு வகிப்பது என்றால் அது கூந்தல் அழகு தான். அதிலும் கருகருவென அலைபாயும் கூந்தல் என்றால் போதும் உங்கள் அழகை பலமடங்கு கூட்டியே காட்டும். அழகை மட்டுமா என்ன உங்கள் இளமையையும் சேர்த்து தான்.

அப்படியானால் இளம் வயதிலேயே உங்கள் கூந்தல் நரைத்து விட்டால் என்ன நடக்கும்.

உங்கள் இளமையும் வயதான தோற்றம் பெற்று விடும் அல்லவா. இந்த இளநரையை நீங்கள் என்ன தான் மறைக்க முயன்றாலும் ஒரு நிரந்தர தீர்வு கிடைக்காமல் நேரம் வீணானது தான் மிச்சமாக இருக்கும். செயற்கை கலரிங் போன்றவை பக்க விளைவுகளை ஏற்படுத்த கூட வாய்ப்புள்ளது.

ஆனால் இயற்கை முறைகள் அப்படி இல்லை நிரந்தர பலனுடன் பக்கவிளைவுகள் இல்லாத பரிசை கொடுக்கும். இந்த முறையை முயற்சி செய்து பாருங்கள் வெற்றி நிச்சயம்.

பீர்க்கங்காய் டானிக்

இளநரைகளின் வேர்ப் பகுதியின் நிறத்தை மாற்றி இளநரையை போக்குகிறது. இதற்கு இந்த டானிக்கை நாம் தயாரிக்க வேண்டும்.

தேவையான பொருட்கள்
  • உலர்ந்த பீர்க்கங்காய் – 1/2 கப்
  • தேங்காய் எண்ணெய் – 1 கப்
செய்முறை

பீர்க்கங்காயை துண்டுகளாக நறுக்கி நிழலிலே காய வைக்க வேண்டும் இந்த உலர்த்த பீர்க்கங்காயை 3-4 நாட்கள் தேங்காய் எண்ணெய்யில் ஊற வைக்கவும்.

இப்பொழுது தேங்காய் எண்ணெய்யை பீர்க்கங்காயுடன் கொதிக்க விடவும். எண்ணெய் கருப்பாக, மாறும் வரை குறைந்த தீயில் வைத்து சூடுபடுத்தவும்.

வடிகட்டி ஸ்டோர் செய்து கொள்ளவும் பயன்படுத்தும் முறை இதை வாரத்திற்கு இரண்டு முறை என கூந்தல் மற்றும் தலையில் தேய்த்து மசாஜ் செய்து வரவும்.

சுவாரஸ்யமான தகவல்

பீர்க்கங்காய் பொதுவாக லூவ்பா என்று அழைக்கப்படுகிறது. இந்த உலர்ந்த பீர்க்கங்காயை கொண்டு தேய்த்து குளிக்க பயன்படும் ப்ரஷ் தான் லூவ்பா ப்ரஷ் என்பது.

மேலும் பீர்க்கங்காய் இது மஞ்சள் காமாலை, தொழுநோய் போன்றவற்றிற்கு உதவுகிறது.

Previous articleஇந்த இரண்டு பழங்களை மட்டும் சேர்த்து சாப்பிடாதீங்க! மரணம் நிச்சயம்!
Next articleஇந்த பொருளை தொடர்ந்து சாப்பிட்டால் இதய நோய் உங்களை எட்டியும் பார்க்காது! எப்படி தெரியுமா!