பிரித்தானிய குடியுரிமை ரத்து செய்யப்பட்ட ஷமீமாவின் கணவன் பல நாட்களுக்கு பிறகு தன்னுடைய மனைவியின் நிலை குறித்து மனம் திறந்துள்ளான்.
2015-ம் ஆண்டு தன்னுடைய 15 வயதில் பிரித்தானியாவில் இருந்து தப்பிய ஷமீமா பேகம் என்கிற மாணவி, சிரியாவில் குடியேறினார். அங்கு சென்றடைந்த 10 நாட்களிலே ரக்கா பகுதியில் 23 வயதில் இருந்த யாகோ ரிட்ஜ் என்கிற பயங்கரவாதியை சந்தித்து திருமணம் செய்துகொண்டார்.
யாகோ ரிட்ஜ், நெதர்லாந்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் குற்றம் சுமத்தப்பட்டு தற்போது 6 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான்.
இந்த தம்பதியினருக்கு பிறந்த இரண்டு குழந்தைகள் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், 2 வாரங்களுக்கு முன்பு பிறந்த ஜெராவுடன் ஷமீமா முகாமில் தனித்து வாழ்ந்து வந்தார். ஆனால் சமீபத்தில் வந்த தகவலின் படி, முகாமில் ஷமீமாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அங்கிருந்து தப்பி வேறு முகாமிற்கு சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.
தற்போது 19 வயதாகும் ஷமீமா பிரித்தானியாவிற்கு திரும்ப விருப்பம் தெரிவித்து வருகிறார். ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அவருடைய குடியுரிமையை பிரித்தானிய அரசு ரத்து செய்தது. அதேசமயம் பங்களாதேஷில் குடியேறலாம் என கூறப்பட்ட நிலையில், அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரும் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே அனைத்து தொலைக்காட்சிகளிலும் தலைப்பு செய்திகளிலும் இடம்பிடித்து வரும் தன்னுடைய மனைவி ஷமீமா குறித்து முதன்முறையாக அவருடைய கணவர் யாகோ ரிட்ஜ் மனம் திறந்துள்ளார்.
யாகோ ரிட்ஜ் தன்னுடைய 15 வயதில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து அவர்களுக்காக போராடினார். சொந்த நாட்டில் அவர் மீதான குற்றசாட்டு நிலுவையில் இருக்கும் நிலையில் கூட குடியுரிமை ரத்து செய்யப்படவில்லை.
முதலில் அவர் ஷமீமாவை திருமணம் செய்ய மறுத்துள்ளார். ஆனால் ஷமீமா ஆசைப்பட்ட காரணத்தினாலே அவரை திருமணம் செய்துள்ளார்.
இந்த நிலையில் இதுகுறித்து பேசியிருக்கும் யாகோ, தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையுடன் சொந்த நாடான நெதர்லாந்திற்கு திரும்பி சேர்ந்து வாழ விரும்புவதாக தெரிவித்துள்ளார்.