பிரித்தானிய இளவரசர் ஹரி – மேகன் மெர்க்கல் தம்பதிக்கு பிறந்த குழந்தையின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகனுக்கு கடந்தாண்டு மே மாதம் 19ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் அவருக்கு கடந்த திங்கட்கிழமை அதிகாலை அழகான ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தையின் புகைப்படத்தை எப்போது ஹரியும், மேகனும் வெளியிடுவார்கள் என்ற மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது இருவரும் சேர்ந்து குழந்தையை வெளி உலகுக்கு காட்டியுள்ளனர்.
இதேவேளை, குழந்தையின் பெயரை இன்னும் தம்பதி வெளியிடவில்லை. குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றன.
A little family.
— duke and duchess (@royallladies) May 8, 2019
Welcome to the family little baby ? pic.twitter.com/1s7nulLECX




