பிரித்தானிய இளவரசர் எடுத்த முக்கிய முடிவு! குவியும் ஆதரவு!

0
410

பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப் தமது 97-வது வயதில் தனது ஓட்டுனர் உரிமத்தை தாமாக முன்வந்து உரிய நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளார்.

இனிமேல் இளவரசர் பிலிப் தனியாக வாகனம் ஓட்டுவதில்லை என்பதையும் பக்கிங்ஹாம் அரண்மனை உறுதி செய்துள்ளது.

கடந்த மாதம் நார்ஃபோக் பகுதியில் நடந்த பதறவைக்கும் சாலை விபத்துக்கு பின்னர், இளவரசர் பிலிப் இந்த முடிவை எடுத்துள்ளார்.

குறித்த விபத்தில் இரு பெண்கள் காயமடைந்ததை அடுத்து பலவேறு தரப்பினர் இளவரசருக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தனர்.

மட்டுமின்றி அந்த விபத்தில் இளவரசரின் கால்களும் காருக்குள் சிக்கியதாக தகவல் வெளியானது.

குறித்த சம்பவத்திற்கு பின்னர் நீண்ட விவாதங்களுக்கு முடிவில் இளவரசர் பிலிப் தமது ஓட்டுனர் உரிமத்தை தாமாக முன்வந்து ஒப்படைத்துள்ளதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இளவரசர் பிலிப்பின் முடிவை நார்ஃபோக் பொலிசாரும் உறுதி செய்துள்ளனர். ஜனவரி 17 ஆம் திகதி நடந்த விபத்துக்கு பின்னர் பிப்ரவரி 9 ஆம் திகதி இளவரசர் தமது ஓட்டுனர் உரிமத்தை ஒப்படைத்துள்ளார் என அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளனர்.

Previous articleமனைவியின் தவறான தொடர்பு! போட்டுக்கொடுத்த அக்கம்பக்கத்தார்! மரணத்தின் தருவாயில் கணவர் கூறிய வார்த்தைகள்!
Next articleசெம்பருத்தி நடிகைக்கு அடித்த அதிர்ஷ்டம்! குவியும் பாராட்டுக்கள்! தீயாய் பரவும் புகைப்படம்!