பிரித்தானியாவில் வாழும் ஆசியாவின் பெரும் கோடீஸ்வரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
லண்டன் நகரில் நடைபெற்ற ‘ஏசியன் பிசினஸ் அவார்ட்ஸ்’நிகழ்ச்சியில் இந்த பட்டியலை பிரித்தானியாவுக்கான இந்தியாவின் உயர் தூதர் ருச்சி கனஷியாம் வெளியிட்டார்.
7 புதிய வரவுகள் உள்பட 101 பெரும் செல்வந்தர்களின் பெயர்களை கொண்ட இந்த பட்டியலில் கடந்த ஆண்டை விட சுமார் 300 கோடி பவுண்டுகள் அதிக வருமானத்துடன் 25.2 கோடி பில்லியன் பவுண்டு மதிப்புள்ள சொத்துகளுடன் இந்துஜா குடும்பம் ஆறாவது ஆண்டாக தொடர்ந்து முதலிடத்தை பிடித்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக 11.2 பில்லியன் பவுண்டுகளுடன் லக்ஷ்மி மிட்டல் மற்றும் அவரது மகனான ஆதித்யா மிட்டல் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளனர்.
5.8 பில்லியன் பவுண்டுகள் சொத்து மதிப்புடன் எஸ்.பி. லோஹியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர்.