பிரித்தானியாவில் தாயார் மற்றும் பிஞ்சு குழந்தை மீது அமிலம் வீச்சு!

0

பிரித்தானியாவின் லீட்ஸ் நகரில் தாயார் மற்றும் 2 வயது குழந்தை மீது அமிலம் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லீட்ஸ் நகரில் உள்ள ஜிப்டன் பகுதியிலேயே இந்த கொடூர சம்பவம் மர்ம நபர்களால் அரங்கேற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து விரைந்து சென்ற பொலிசார் 28 வயது தாயாரையும், அவரது 2 வயது குழந்தையையும் ஆபத்தான நிலையில் மீட்டு மருத்துவமனை சேர்ப்பித்துள்ளனர்.

அமிலம் வீசப்பட்ட பகுதியில் பிளாஸ்டிக் பேப்பரால் மூடப்பட்டது. சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டதில்,

குறித்த தாயாருடன் சிலல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அது கைகலப்பாக மாறிய நிலையில் திடீரென்று அமிலம் வீசப்பட்டதாக தெரியவந்துள்ளது.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தாயார் லேசான காயங்களுடன் தப்பியதாக கூறப்படுகிறது.

Previous articleபிக்பாஸ் 3 லொஸ்லியாவின் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நெட்டிசன்கள்! ஆச்சர்யத்தில் பார்வையாளர்கள்!
Next articleவடகொரியவுக்குள் அதிரடியாக நுழைந்த ட்ரம்ப்! உலக அரங்கின் வரலாற்று நிகழ்வு!