பிரான்சில் தனது தாயின் சடலத்துடன் சிறுமி ஒருவர் ஆறு நாட்கள் தங்கியிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Perpignan நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை குறித்த கட்டிடத்தின் அருகில் வசிப்பவர்கள் காவல்துறையினரை அழைத்து தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிசார் அங்கு மூன்றரை வயது சிறுமி குடியிருப்பில் தனியாக இருந்த கண்டறிந்துள்ளனர்.
தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் அச்சிறுமியின் தாயார் குளியலறையில் சடலமாக கிடந்துள்ளார்.
தாய் உயிரிழந்து ஆறு நாட்கள் ஆனதாக காவல்துறையினர் தெரிவித்தனர். குறித்த சிறுமியிடம் தாயார் குறித்து விசாரித்த போது, தனது தாயார் உறங்கிக்கொண்டிருப்பதாக பதிலளித்துள்ளார்.
41 வயதுடைய தாயின் சடலத்தை காவல்துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.