பிரபல இயக்குனர் விளக்கம்! “தளபதி 64” படத்தின் தலைப்பு குறித்த சர்ச்சை!

0

பிரபல இயக்குனர் விளக்கம்! “தளபதி 64” படத்தின் தலைப்பு குறித்த சர்ச்சை!

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “தளபதி 64” படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்திற்கு சம்பவம் என்ற தலைப்பு வைத்துள்ளதாக தகவல்கள் பரவின.

மேலும், சம்பவம் என தொடங்கும் ஒரு பாடலும் படத்தில் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், மைனா, சாட்டை, மொசக்குட்டி, சவுகார்பேட்டை, பொட்டு ஆகிய படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டூடியோஸ், ஜான் மேக்ஸ் புதிய படத்தை தயாரித்து வருகிறார்.

இயக்குனர் ரஞ்சித் பாரிஜாதம் இயக்கும் இத்திரைப்படத்திற்கு “சம்பவம்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் நடன இயக்குனர் தினேஷ் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். நாயகிகளாக பூர்ணா மற்றும் சிருஷ்டி டாங்கே நடிக்கின்றனர்.

சம்பவம் என்ற தலைப்பை முறையாக ரெஜிஸ்டர் செய்து இப்படத்தின் படப்பிடிப்புகளை நடத்தி வருகிறோம். ஆனால், விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி64 படத்திற்கு சம்பவம் என்று பெயர் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

இந்த செய்தி எங்கள் படக்குழுவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், சம்பவம் என்ற தலைப்பு எங்களுக்கு சொந்தமானது. அதனால் விஜய் படம் பற்றி வரும் தகவல்கள் வெறும் வதந்தி தான் அதனை நம்பாதீர்கள்’ என்று கூறியுள்ளார்.

இங்கே கிளிக் செய்து படங்களை பார்வையுடவும்!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleரசிகர்கள்ளின் ஆச்சரியம்! எதார்த்தமாக எடுத்த போட்டோவை பதார்தமாக பகிர்ந்த நயன்தாரா!
Next articleஇந்திய வீரர் கோஹ்லி வெளியிட்ட புகைப்படம், இந்த வீரரை என்னால் ஜெயிக்க முடியவில்லை!