பிரதேச சபை ஊழியர் காட்டு யானை தாக்கி படுகாயம்!

0

வாகரை பிரதேசசெயலாளர் பிரிவிலுள்ள தேக்கஞ்சேனை எனும் இடத்தில் காட்டு யானை தாக்கியதில் பிரதேச சபையில் கடமையாற்றும் தொழிலாளி ஒருவர் காயமடைந்து ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரா.முணியாண்டி என்ற 47 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோறளைப்பற்று பிரதேச சபை வழைச்சேனையில் சுகாதார தொழிலாளர்களின் மேற்பார்வையாளராக கடமையாற்றும் நபர், சம்பவம் இடம்பெற்ற தினமன்று குறித்த பிரதேசத்தில் ஜே.சி.பி. இயந்திரத்தின் துணைகொண்டு கழிவுப்பொருட்க்களை கொட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டபோது காட்டிற்குள் மறைந்திருந்த யானை ஒன்று குறித்த நபரை தாக்கி காயத்தினை ஏற்படுத்திவிட்டு காட்டிற்குள் சென்றுள்ளது.

பின்னர் தாக்குதலுக்குள்ளான நபரை உடனடியாக அவருடன் சென்ற சக ஊழியர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிசிசைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்ட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅசலா? போலியா? கண்டறிவது எப்படி பகிருங்கள்!
Next articleதிருகோணமலை பகுதியில் கேரளா கஞ்சா வைத்திருந்த நபருக்கு 1500 ரூபாய் தண்டம்!