பிங்க் கலர் லிப்ஸ் வேணுமா? இதை ட்ரை பண்ணலாமே !

0

பெண்கள் அழகு குறிப்பு: உதடுகளை அழகுப்படுத்த விரும்புபவர்கள் அழகுச்சாதனப் பொருட்களை மட்டும் நம்பி இருக்காமல் வீட்டு உபயோகப்பொருட்களை பயன்படுத்தியும் அழகுப்பெற செய்யலாம். இந்த சிம்பிள் டிப்ஸை ட்ரை பண்ணி உங்க லிப்பை பிங்க் கலர் ஆக்குங்க.

ஈரத்தன்மையின்றி உலர்ந்து காணப்படும் உதடுகளுக்கு தேனை அடிக்கடி பயன்படுத்தலாம்.

தேனுடன் எலுமிச்சைச் சாறு, சர்க்கரை கலந்து தினமும் பூசி வந்தால் உதடுகள் மென்மையுடனும், பளபளப்புடனும் இருக்கும்.

ஏனெனில், தேனில் சருமத்தில் ஈரப்பசையை தக்க வைக்கும் சக்தி இருப்பதால், அவை உதடுகளை மென்மையாக வைத்துக்கொள்ள உதவும்.

அதற்கு சிறிது தேனை எடுத்து, உதடுகளில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, பின் 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.

உதடுகள் பளிச்சென்று தோற்றமளிக்க புதினாவும் உதவுகிறது. புதினாவை சாறு பிழிந்து சர்க்கரையுடன் கலந்து தினமும் உதட்டில் பூசி வர வேண்டும். அவை உலர்ந்தவுடன் கழுவினால் உதடுகள் அழகு பெறும்.

குங்குமப்பூ உதட்டில் உள்ள கருமை நிறத்தை மாற்றும் தன்மை கொண்டது. பாலில் குங்குமப்பூவை சிறிது நேரம் ஊற வைத்து, அதனுடன் சர்க்கரை சேர்த்து உதட்டில் பூசி வந்தால் உதடுகள் பொலிவு பெறும்.

அடிக்கடி கற்றாழையின் ஜெல்லை உதடுகளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், அவை உதடுகளை மென்மையாக்குவதுடன், உதடுகளின் நிறத்தை பிங்க் நிறத்தில் மாற்றும்.

பால் பொருட்களில் ஒன்றான தயிரில் அதிக எண்ணெய் பசை நிறைந்திருப்பதால், இதனை உதடுகளுக்கு அடிக்கடி தடவி வந்தால், அவை உதடுகளில் வறட்சி ஏற்படுவதைத் தடுப்பதோடு, உதடுகளை மென்மையாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது.

வெள்ளரிக்காய் துண்டுகளை உதடுகளின் மேல் வைத்து 15 நிமிடம் ஊற வைத்து வந்தால், அவை உதடுகளுக்கு ஈரப்பசையைத் தருவதுடன், உதடுகளில் உள்ள கருமையை மறையச் செய்யும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபறவைக் காவடியுடன் இருவர்! யாழ்: நல்லூரில் தீலீபனின் நினைவிடத்தில்!
Next articleபலரையும் கண் கலங்க வைத்த நிமிடங்கள்… நல்லூர் பகுதியில்!