பிக்பாஸ் நிகழ்ச்சியில் 10 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் மீதம் 8 போட்டியாளர்கள் உள்ளே படுபயங்கரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.
இறுதிக்கட்டத்தை எட்டி வருவதால் பந்த பாசத்திற்கு இடமில்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. வெளியே வந்த போட்டியாளர்கள் மீண்டும் சிறப்பு விருந்தினராகவும், வைல்டு கார்டு எண்ட்ரியாகவும் செல்ல முடியும் என்பதால் வனிதா வீட்டிற்குள் மீண்டும் சென்றார்.
இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் அல்லது வரும் நாட்களில் பிக்பாஸ் வீட்டிற்கு, கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் வெளியேறிய அபிராமி உள்ளே செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அவர் சிறப்பு விருந்தினராக செல்கிறாரா அல்லது மீண்டும் போட்டியாளராக செல்கிறாரா என்பது தெரியவில்லை.
மற்றொரு புறம் அபிராமிக்கு பதில் சாக்ஷி உள்ளே சென்றால் பிக்பாஸ் வீடு இன்னும் சண்டையினால் களைகட்டும் என்று கூறப்படுகின்றது.