பிக்பாஸ் வீட்டில் கமலுடன் ரஜினி! வெளியானது பிக்பாஸ் வீட்டின் புகைப்படங்கள்!

0

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு பாகங்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், வரும் 23ஆம் தேதி முதல் ஆரம்பமாகும் ‘பிக்பாஸ் 3’ நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கவுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் 15 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாகவும், அவர்களது பெயர் விரைவில் தெரிய வரும் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் சென்னை அருகேயுள்ள தனியார் ஸ்டுடியோ ஒன்றில் பிக்பாஸ் வீட்டின் செட் போடப்பட்டுள்ளது. ‘பிக்பாஸ் செட்டில் பலவிதமான ஓவியங்கள் கண்ணை கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பேட்ட ஸ்டைலில் ஓவியமாக உள்ளார். அதேபோல் மறைந்த நடிகை ஸ்ரீவித்யா உள்பட ஒருசில நட்சத்திரங்களின் ஓவியங்கள் உள்ளதாக கூறப்படுகின்றது. தற்போதுகமல்ஹாசனின் ஓவியம் விருமாண்டி பட ஸ்டைலில் நெற்றியில் விபூதியுடன் புகைப்படம் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் 2 போலவே பிக்பாஸ் 3 வீட்டிலும் ஜெயில் உள்ளது. ஆனால் இந்த முறை ஜெயிலில் பாத்ரூம் வசதி உள்ளது. மேலும் இந்த வீட்டில் சைக்கிள், ரிக்சா, டிராக்டர் மாடல்களில் ஆங்காங்கே அலங்கார பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் கிச்சன், லாரி வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

கண்கவர் ஓவியங்கள், ரம்மியமான கலைப்பொருட்கள் என பிக்பாஸ் வீடு ஒரு மியூசியம் போல் காணப்படுவதாகவும், முதல் இரண்டு பாகத்தை விட மூன்றாவது பாகம் போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் சுவாரஸ்யம் தரும் வகையில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதோ மியூசியம் போன்று காட்சியளிக்கும் பிக்பாஸ் வீட்டின் புகைப்படங்கள்.

Previous articleஇரவில் கதவை திறந்து வைத்து படுத்திருந்த பெண்! வீட்டிற்குள் நுழைந்த இளைஞர்! கிராம மக்கள் செய்த செயல்!
Next articleமூன்று மாதம் பகல் மூன்று மதம் இரவு! வியக்க வைக்கும் அதிசய தீவு! எங்கு தெரியுமா!