பிக்பாஸ் வீட்டில் அனைவர் முன்பும் சாக்‌ஷியை கை நீட்டி அடிக்க சென்ற கவின்!

0
490

பிக்பாஸில் இன்று நாட்டாமை டாஸ்க்கில் நன்றாக செயல்பட்டது மீரா, ஷெரீன் தான் என கேப்டன் ரேஷ்மா கூற மதுமிதா உடனே, அவரால் தான் பிரச்சனைகள் பல ஏற்பட்டன. அதனால் இதை ஏற்றுகொள்ள முடியாது என கூறினார்.

பரபரப்பாக சென்ற இந்த வாதத்திற்கு இடையில் கவின், இந்த டாஸ்க்கில் சாக்‌ஷியிடம் மொழி பிரச்சனை இருந்தது என்று கூற சாக்‌ஷி, நான் என்ன சுவாரஸ்யமாக டாஸ்க்கை செய்யவில்லையா? என்று திரும்ப திரும்ப கேட்டப்படி இருந்தார்.

இதற்கு கவினோ, நான் சுவாரஸ்யத்தை பற்றி பேசவில்லை, மொழிப்பிரச்சனையை பற்றி அதாவது கிராமத்து மொழி போன்று உன்னால் பேச முடியவில்லை என்று விளக்கினார். ஆனால் இதையெல்லாம் சிறிதும் காதில் வாங்காத சாக்‌ஷி, மீண்டும் அதே கேள்வியை கேட்டுக்கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் செம்ம கோபமான கவின், அடிச்சு சாவடிச்சுருவேன் டி என்று கை நீட்டி அடிக்க சென்றார்.

இதனால் அதிர்ச்சியான சாக்‌ஷி உடனே கதறி அழ ஆரம்பித்துவிட்டார்.

Previous articleகீரையுடன் இதை சேர்த்து சாப்பிட்ட ஆசிரியை நொடியில் மாரடைப்பால் இறந்த பரிதாபம்!
Next articleசீஸ் துண்டால் பறிபோன பிரித்தானிய சிறுவனின் உயிர்: மரணப்படுக்கையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட தாயார் !