Home thatstamil one india tamil oneindia tamil பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் மதுமிதா?.. வெளியான பரபரப்பு தகவல்..!

பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் மதுமிதா?.. வெளியான பரபரப்பு தகவல்..!

0
505

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த நாட்களாக ரசிகர்கள் யாரும் எதிர்பாராத வகையில் சரவணன் வெளியேறியதும், மதுமிதா தற்கொலைக்கு முயன்றதும், என பல சர்ச்சையான விஷயங்களே நடந்திருந்தது.

மேலும், சரவணன் வெளியேறியதுமே ரீஎன்ட்ரியாக கஸ்தூரி நுழைந்தார். ஆனால் அவரும் பெரிதும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுவாரஷ்யத்தை ஏற்படுத்ததால், வெளியேறிய வனிதாவை அழைத்து வந்தனர். அதன் பின்னர் கஸ்தூரி குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெளியேற்றப்பட்டார். அவருக்கு சீக்ரெட் ரூம் வாய்ப்பு கிடைத்தும் அவர் அதை ஏற்க மறுத்து வெளியேறினார்.

இந்நிலையில் பிக்பாஸில் வெளியேறுவதும், வெளியேறிவர்கள் மீண்டும் நுழைவதுமாக தற்போது மாறியுள்ளது. தற்போது கடந்த வாரம் வெளியேறிய மதுமிதா மீண்டும் வைல்டு கார்டு போட்டியாளராக வர உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆனால் இது எந்தளவு உண்மை தகவல் என்பது தெரியவில்லை. ஏன்னென்றால் மதுமிதாவுக்கும், பிக்பாஸுடன் சம்பளம் பிரச்சினை இருந்ததாக அவர் வெளியேறிய பின்னர் தெரியவந்தது. இதை வைத்து பார்க்கும் பொழுது மதுமிதா உள்ளே வருவது கடினம் தான் என எதிர்பார்க்கப்படுகிறது. எதுவாக இருந்தாலும் இனி வரும் வாரங்களில் பொறுத்திருந்து தான் காணவேண்டும்.

Previous articleமாமனாரின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. சமந்தா அணிந்துவந்த ஹாட்டான உடை !
Next articleபிரபல நடிகர் ஷாருக்கானின் மகள் எங்கு சென்றுள்ளார் பாருங்க? சில நிமிடத்தில் நீக்கியதேன்? வைரலாகும் வீடியோ!