பிக்பாஸ் போட்டியாளராக தற்போது இருக்கும் கவினின் தாயார் பணமோசடி காரணமாக பொலிசார் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று கவின் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் கவினின் அம்மா கைது செய்யப்பட்டதற்கு சாக்ஷி வெளியிட்ட கருத்தினை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். சாக்ஷி தனது ட்விட்டில், என்னுடைய ரசிகர்களுக்கு நான் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். கவின் குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள இந்த எதிர்பாராத நிலையை யாரும் கிண்டல் செய்ய வேண்டாம். எனக்கு தனிப்பட்ட முறையில் பிரச்சினை உள்ளது.
ஆனால், அவர்கள் குடும்பத்தாருக்கும் எனக்கும் எந்தவித பிரச்சினையும் இல்லை. எனவே, அவர்களை கிண்டல் செய்ய வேண்டாம். அவர் குடும்பத்திற்கு ஆதரவளியுங்கள் என்று கூறியுள்ளார். இதனைக் கண்ட கவின் ஆர்மியினர் சாக்க்ஷி விளம்பரத்திற்காக இப்படித்தான் செய்கிறார் என்று குறைகூறி வருகின்றனர்.
I am requesting all my followers and fans not to troll kavin’s family members with this unexpected situation. Kavin and I have had issues but not with his family members so i request you people not to troll them,pls support them
Thank you ? #Humanity #Kavin— Sakshi Agarwal (@ssakshiagarwal) August 29, 2019