பிகாரில் 125 குழந்தைகளின் உயிரை பறித்தது இந்த ஒரு பழம் தானா ! என்ன காரணம் தெரியுமா ! பெற்றோர்களே கவனம் !

0

பிகாரில் 125 குழந்தைகளின் உயிரை பறித்தது இந்த ஒரு பழம் தானா ! என்ன காரணம் தெரியுமா ! பெற்றோர்களே கவனம் !

பீகாரில் மூளைக்காய்ச்சல் பாதிப்பால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 125 குழந்தைகள் இறந்துள்ளனர். 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதற்கு காரணம் ஒரு பழம்தான் என்று வெளியாகியுள்ள தகவல் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் கோடைகாலத்தில் அதிகமாக விளையும் லிச்சி பழம். உடலில் உள்ள சர்க்கரையின் அளவை வெகுவாக குறைக்கும் என கூறப்படுகிறது. மூளைக்காய்ச்சல் ஏற்படுவதற்கும் உடலில் சர்க்கரை அளவு குறைவதுதான் காரணம் என்பதால் லிச்சி பழத்தால்தான் சர்க்கரை அளவு குறைந்திருக்க கூடும் என்ற ரீதியில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பீகார் மருத்துவர்கள் சிலர் “லிச்சி பழத்தால்தான் மூளைக்காய்ச்சல் ஏற்படுகிறது என்று அதிகாரபூர்வமான எந்த தகவல்களும் வெளியாகவில்லை. இருப்பினும் இரவினில் குழந்தைகள் இதுபோன்ற பழங்களை உண்ணுவதை விட உணவு உண்பதே அவர்களது ஆரோக்கியத்திற்கு நல்லது” என்று தெரிவித்துள்ளார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅடுத்த 3 மாதத்திற்கு பிராய்லர் கோழி வாங்காதீர்கள் – முழு விபரம் இதோ !
Next articleஆக்‌ஷன் படத்தில் இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை தமன்னா !