பாலியல் துஷ்பிரயோகத்திலிருந்து இளம்பெண்ணைக் காத்த எறும்புகள்!

0
700

இந்தோனேஷியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை ஒரு நபர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சிக்கும்போது, திடீரென ஒரு கூட்டம் எறும்புகள் தாக்கியதால் அந்த பெண் தப்பிய ஆச்சரிய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

இந்தோனேஷியாவைச் சேர்ந்த Toni Irawan (29) என்னும் இளைஞர், பெயர் வெளியிட விரும்பாத A.S என்னும் இனிஷியல் கொண்ட 16 வயது இளம்பெண்ணை காரில் அழைத்துச் சென்றுள்ளார்.கார் புறப்பட்டதுமே, அவளிடம் தன்னுடன் பாலுறவு கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார் Toni. தொடர்ந்து உறவு கொள்ள அவர் வற்புறுத்தவே, அதிர்ந்துபோன அந்த இளம்பெண், ஓரிடத்தில் Toni காரை நிறுத்தும்போது தப்பியோட முயன்றிருக்கிறார்.அவளை வலுக்கட்டயமாக இழுத்து வந்து காருக்குள் தள்ளிய Toni, காரை எடுத்துக் கொண்டு இன்னொரு இடத்துக்கு சென்றிருக்கிறார்.ஆள் நடமாட்டமில்லாத ஒரு இடத்தில் காரை நிறுத்திய Toni, அவளை பிடித்து இழுத்துச் சென்று, ஒரு புதருக்குள் தள்ளி வன்புணர்வு செய்ய முயன்றிருக்கிறார்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு பெருங்கூட்டம் எறும்புகள் இருவரையும் கடிக்க, கடிபட்ட வலியில் Toni திகைத்து நின்றபோது, அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தப்பி ஓடிய அந்த இளம்பெண் பக்கத்திலுள்ள கிராமத்திற்கு சென்று உதவி கோரி குரல் எழுப்பியிருக்கிறார்.கைது செய்யப்பட்ட Toni மீது விசாரணை தொடங்கியுள்ள நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் மூன்றாண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை சிறையில் செலவிட நேரிடும்.

Previous articleஇன்றைய ராசிப்பலன் – 26.01.2019 சனிக்கிழமை.
Next articleகருஞ்சீரகம்: புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய்க்கு தீர்வு தரும் கருஞ்சீரகம்!