பாராளுமன்றத்தில் ஐசக் நியூட்டன் பேசிய அந்த ஒரு வார்த்தை!

0

கற்றது கையளவு, கல்லாதது உலகளவு… இன்னிக்கி நாம கககபோ #001ல ஸ்கூபி டூவுல இருந்து, pussyங்கிற ஊரு, பெண்களோட முதிர்ச்சி, ஐசக் நியூட்டன் பாராளுமன்றத்துல பேசுன அந்த ஒரு வார்த்தை, அழுகையை எப்படி அடக்கலாம், செஸ் போர்டுல இருக்கு அந்த 169,518,829,100,544,000,000,000,000,000 மேட்டர் என்னன்னு நிறையா சுவாரஸ்யமான உண்மைகள், இதுவரைக்கும் நீங்க வாழ்க்கையில முன்ன, பின்ன கேட்டறிந்துடாத தகவல்கள் குறித்து பார்க்க போறோம்.

#1
ஸ்கூபி டூ கார்டூன் கதாப்பாத்திரம் அறியாத நபர்களே இருக்க முடியாது. முக்கியமாக 90s கிட்ஸ். ஸ்கூபி, ஸ்கூபி டூ என்ற அந்த பாடல் பிடித்திராத சிறார்களே இருக்க இயலாது எனும் அளவிற்கு அது பிரபலம். ஆனால், ஸ்கூபி டூ என்று அழைக்கப்படும் அந்த நாய் கதாபாத்திரத்தின் முழுப் பெயர் ஸ்கூபி டூ அல்ல. அதன் உண்மையான முழுப் பெயர் Scoobert Doo.

#2
சிலர் பொசுக்கு, பொசுக்கு என்று அழுதுவிடுவார்கள். உண்மை பேசுபவர்கள் அதிகம் அழுவார்கள் என்றும் கூறுவார்கள். ஆனால், நம் சமூகத்தில் அழும் நபர்களை கோழையாகவும், தைரியம் இல்லாதவர்கள் என்றும் காணும் நோக்கம் இருக்கும். என்ன முயற்சித்தும் என்னால் அழுகையை அடக்க முடியவில்லை எனும் நபர்கள், அழுகை கண்களை முட்டிக் கொண்டு வரும் போது, தாடை பகுதியை இறுக்கமாக வைத்துக் கொள்ளாமல், கண்ணிப்பதை கொஞ்சம் தவிர்த்தல், அழுகையை அடக்கிக் கொள்ள முடியும்.

#3
உணர்ச்சி / உணர்வு ரீதியான முழு முதிர்ச்சியானது பெண்களிடத்தில் சராசரியாக 32 வயதில் தென்படுகிறதாம். ஆனால், ஆண்கள் இடத்தில் இது 43 வயதில் தான் தென்படுகிறது என்று ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.

#4
1689-90ம் ஆண்டுகளில் ஓராண்டு காலம் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த போது ஐசக் நியூட்டன் ஒரே ஒரு முறை தான் பேசினாராம். அதுவும், தன்னருரே இருப்பவரிடம், ஜன்னலை மூடும்படி கூறினாராம். மேலும், இவர் 1701-02ம் ஆண்டுகளில் பாராளுமன்ற உறுப்பினராக ஓராண்டு காலம் பதவி வகித்தாரம். அந்த காலக்கட்டத்திலும் இவர் மிக அமைதியாகவும், சிறிதளவிலான பங்களிப்பை தான் எடுத்துக் கண்டார் என்று வரலாற்று தகவல்கள் கூறுகின்றன.

#5
பிரான்ஸ் நாட்டில் புஸி (Pussy) என்ற பெயரில் ஒரு சிறிய கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில் பரப்பளவு 18 கிமீ. தான். மேலும், இங்கே மொத்தமே 300க்கும் குறைவிலான மக்கள் தான் வாழ்ந்து வருகிறார்கள். இங்கே வசிக்கும் மக்களை Pussies என்று அழைக்கிறார்கள்.

#6
பரவலாக உறவுகளில் அதிக அக்கறை எடுத்துக் கொள்பவர்கள் யார் என்று கணக்கெடுப்பு நடத்தினால், அதில் பெண்கள் தான் முதல் இடத்தை பிடிக்கிறார்கள். ஆனால், அதே உறவு ப்ரேக்-அப் நிலையை அடைந்துவிட்டால், உறவில் இருந்து விலகி செல்வதிலும், பிரிந்து போவதிலும் கூட பெண்களே முதல் இடத்தில் இருக்கிறார்கள்.

#7
ஓர் ஆய்வில், குழந்தைகளுக்கு அவர்களுடைய பெற்றோர் தங்கள் பதின் வயதில் அதிகம் விரும்பி கேட்ட இசை / பாடல்கள் மிகவும் விரும்பி கேட்பார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

#8
சதுரங்க ஆட்டத்தில் முதல் பத்து நகர்வுகளை விளையாட 169,518,829,100,544,000,000,000,000,000 வழிகள் இருக்கின்றனவாம். இதில் உங்களுக்கு எத்தனை தெரியும்.?!

#9
இசை / பாடல் கேட்டுக் கொண்டே வீட்டு வேலைகள் செய்யும் 89% பேர், தாங்கள் செய்யும் வேலைகளை கடினமாக உணர்வதில்லை. மேலும், மற்றவரோடு ஒப்போடுகையில் மிக வேகமாக வேலைகளை செய்து முடித்து விடுகிறார்கள்.

#10
காரமான உணவு சாப்பிடுவர்களுக்கு மூடு வேற மாதிரி வெளிப்படும் என்று பொத்தாம் பொதுவாக பேசுவார்கள். ஆனால், உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? ஸ்பைசி உணவுகள் சாப்பிடும் போது என்டோர்பின் எனப்படும் நல்ல உணர்ச்சியை வெளிப்படுத்தும் சுரப்பி நன்கு சுரக்குமாம். இதனால் தான் காரசாரமான உணவு சாப்பிடும் நபர்கள் கொஞ்சம் கூடுதல் ஜாலி பர்சனாக விளங்குகிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த 6 ராசிகளில் பிறந்த ஆண்களை திருமணம் செய்ய போகிற பெண்கள் அதிர்ஷ்டசாலிகள்தான்!
Next articleஇந்த நடிகர், நடிகைகள் ஃப்ரீயா இருந்தா என்ன பண்ணுவாங்க தெரியுமா!