தன்னுடன் செல்பி எடுக்க வந்த இளைஞரின் மொபைலை ஆவேசமாக தட்டிவிட்ட சிவக்குமார் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
மதுரை பொரியார் பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள கருத்தரிப்பு மையம் திறப்பு விழாவில் நடிகர் சிவக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் ஆா்வத்துடன் வந்து சிவக்குமாருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனா். இளைஞா் ஒருவரும் சிவக்குமாருடன் புகைப்படம் எடுக்க முயன்றார் அப்போது யாரும் எதிபார்க்காத நிலையில் சிவக்குமார் அந்த இளைஞரின் கைப்பேசியை தட்டிவிட்டார். இதில் கைப்பேசி கீழே விழுந்து சிதறியது.
அதற்கு சிவக்குமார் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட இளைஞரும் குறித்த மொபைல் தனது அண்ணனுடையது என்றும், தனது அப்பா கவுன்சிலர் ஓ.பி.எஸ் வருகிறார் என்று முதலில் கூறியதால் அவரைப் பார்க்கவே அங்கு சென்றதாகவும், ஆனால் அவர் வரவில்லை சிவகுமார் நடிகர் தானே என்று செல்பி எடுக்க முயன்றேன். ஆனால் இவ்வாறு செய்துவிட்டார்.
ஆனாலும் சிவக்குமார் இவ்வாறு செய்தது ரசிகர்களிடையேயும், மக்களிடையேயும் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விக்ரம், சிம்புவுடன் செல்பி எடுக்க சிறுவன் ஆசைப்பட்ட போது அவர்கள் ஒரு நல்ல நடிகனாக இருந்து என்ன செய்துள்ளனர் என்ற காணொளியினை நெட்டிசன்கள் தீயாய் பரப்பி வருகின்றனர்.