பாகற்காய் சாற்றை, எலுமிச்சை சாற்றில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால்!

0

பாகற்காயில் விட்டமின் B1, B2, B3 ,C, மக்னீசியம், ஃபோலேட், சிங்க், பாஸ்பரஸ், மாங்கனீஸ், நார்ச்சத்து போன்ற பல சத்துகள் உள்ளது.

அதுவும் பாகற்காயில் உள்ள பீட்டா கரோட்டின், நம் உடலுக்குள் விட்டமின் A-வாக மாற்றப்பட்டு சேகரமாகி கண்கள், தோல் மற்றும் தலைமுடி ஆகியவற்றின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.

பாகற்காயை எப்படி பயன்படுத்த வேண்டும்?
பாகற்காயை ஜூஸாக குடித்து வந்தால் குடலில் உருவாகும் புழுக்கள், ஒட்டுண்ணிகளை அழித்து, ஒவ்வாமை, வீக்கம் மற்றும் கட்டிகளை போக்கும்.

பாகற்காயின் விதைகள், இதய நோய்களிலிருந்து பாதுகாத்து, நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை எரித்து, இதய தமனி அடைப்பு வராமல் தடுக்கிறது.

பாகற்காய் சாற்றை, எலுமிச்சை சாற்றில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 6 மாதம் குடித்து வந்தால், முகப்பரு, சிரங்கு, அரிப்பு, சொரியாஸிஸ், படர்தாமரை, அலர்ஜி போன்ற தோல் பிரச்சனைகள் நீங்கும்.

பாகற்காய் சாற்றில் தயிரில் கலந்து தொடர்ந்து தலையில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால், முடி பளபளப்பாக மாறும்.

பாகற்காய் சாற்றுடன் சீரகத்தை சேர்த்து நன்கு அரைத்து அதை தலையில் தடவி வந்தால், பொடுகு பிரச்னைகள் நீங்கும்.

பாகற்காய் சாற்றுடன் வாழைப்பழத்தை சேர்த்து நன்கு அரைத்து அதை தலையில் தேய்த்து வந்தால், தலை அரிப்பு நீங்கும்.

பாகற்காய் சாற்றோடு சிறிது சர்க்கரை சேர்த்து பேஸ்ட் போல செய்து அதை தலையில் தடவி வர, தலைமுடி கொட்டுவது குறையும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஈறுகள் மேலே ஏறியது போன்று உள்ளதா! அப்போ இதை பின்பற்றுங்க!
Next articleசெவ்வாழையின் மருத்துவ பயன்கள்!