இந்தோனேஷியாவில் தன்னைக் கவனிக்காத பாகனிடமிருந்து யானைக்குட்டி ஒன்று செல்போனை பறிக்க முயன்ற காட்சிகள் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
இந்தோனேஷியாவில் உள்ள பரூமன் நகாரி (Barumun Nagari) விலங்கியல் பூங்காவில் தாயை இழந்த உலி என்ற யானைக் குட்டி ஒன்று பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதனை வளர்த்து வரும் பாகன் தனது செல்போனில் மூழ்கியிருந்ததைக் கண்ட உலி யானை, தன்னைக் கவனிக்குமாறு செய்கை செய்தது.
ஆனால் அதனை பாகன் கண்டு கொள்ளாததால் செல்லாமாகக் கோபம் கொண்ட உலி யானைக்குட்டி, பாகனிடமிருந்து செல்போனை பறிக்க முயன்றது. இதன் வீடியோ பதிவு இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.