புகைப்படம் பிடிப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. சாதாரணமாக திருமண மற்றும் வேறு சுப நிகழ்ச்சி என்றால் சுலபமே.
ஆனால் வன விலங்குகளை எடுக்க வேண்டுமென்றால் பொறுமை மிக மிக அவசியமே… இங்கு பல ஆண்டுகள் முயற்சிக்குப் பின்பு நபர் ஒருவர் எடுத்துள்ள காணொளி காண்பவர்களை பிரமிக்க வைத்துள்ளது.
பருந்து ஒன்றின் வேட்டையினை மிகத் துள்ளியமாக படம்பிடித்துள்ளார்.. குறித்த காட்சி ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட காட்சியாம். இதனை சமூகவலைத்தளத்தில் 44 லட்சம் அவதானித்துள்ளனர்.