Home Rasi Palan ராசி பலன் பலன் தரும் ஸ்லோகம்: கொடிய துன்பங்கள் நீங்க, தேவியின் திருவருள் கிட்ட ஜெயதுர்க்கா ஸ்லோகம் !

பலன் தரும் ஸ்லோகம்: கொடிய துன்பங்கள் நீங்க, தேவியின் திருவருள் கிட்ட ஜெயதுர்க்கா ஸ்லோகம் !

0
655

த்யானம் ஸ்லோகம்

காலாப்ரபாம் கடாக்ஷைர ரிகுல பயதாம்

மௌளிபத்தேந்து ரேகாம்

சங்கம் சக்ரம் க்ருபாணம் த்ரிசிகமபி கரை

ருத்வ ஹந்தீம் த்ரிநேத்ராம்

ஸிம்ஹஸ்கந்தாதி ரூடாம் திரிபுவன மகிலம்

தேஜஸா பூரயந்தீம் – த்யாயேத் துர்க்காம்

ஜயாக்யாம் த்ரிதசபரிவ்ருதாம்

ஸேவிதாம் ஸித்திகாமைஹி

பொதுப்பொருள்: தேவர்கள் அனைவரும் கூடி துர்கா தேவியைத் துதித்து பேறு பெற்றனர். இத்தேவியின் மந்திரத்திற்கு பிரம்மதேவன் மஹரிஷியாகிறார். அன்னை சிம்மவாஹினியாக காட்சி தருகிறாள். சங்கு, சக்ரம், வாள், திரிசூலம் ஆகிய ஆயுதங்களோடு நான்கு கரங்களாலும் பக்தர்களைக் காத்தருள்கிறாள். அஷ்டமா சித்திகளையும் வேண்டும் பக்தர்களுக்கு அருளும் அன்னை இவள். இத்தேவியின் மந்திரம் ரக்ஷாகரமானது. இந்த மந்திர பாராயண பலனால் பக்தர்கள் தீவினைகள் நீங்கி இன்புறுகின்றனர். இத்தேவியின் மந்திரத்தில் துர்க்கே துர்க்கே என இருமுறை தேவியின் திருநாமம் வருவதால் எத்தகைய கொடிய துன்பங்களும் பக்தரை விட்டு எளிதில் நீங்கும். இத்தேவியின் அருள் கிட்டிட எங்கும் வெற்றி, எதிலும் வெற்றி கிட்டும். விதியை சரியாக்கும் அனுக்கிரகம் செய்யக்கூடிய வழிபாடும் கிடைக்கும். தேவி மஹாத்மியத்தின் 4ம் அத்தியாய பாராயண பலனைத் தருபவளும் இவளே.

Previous articleToday Rasi Palan இன்றைய ராசிப்பலன் – 08.10.2019 !
Next articleகல்வி, செல்வம், வீரம் மூன்றும் அருளும் அற்புத ஸ்லோகம !