சீனாவில் 8 வயது சிறுமியின் வயிற்றை சிடி ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் 1.5 கிலோ எடை கொண்ட தலைமுடி பந்து போன்று சுருண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Feifei என்ற சிறுமி தனது 2 வயதில் இருந்தே தலைமுடியை சாப்பிடும் பழக்கத்தை அடிமையாகியுள்ளார். இந்த தலைமுடிகள் நாளடைவில் அதிகமாகி ஒரு பந்து போன்று மாறியுள்ளது.
சிறுமிக்கு 8 வயதாகிவிட்ட நிலையிலும், சமீபத்தில் தான் தலைமுடி சாப்பிடும் பழக்கத்தை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் அதிக வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட ஆரம்பித்துள்ளது. இதனைத்தொடர்ந்து மருத்துவரை அனுகியபோது, உணவுப்பிரச்சனை ஏதும் இல்லை எனகூறி மருந்துகளை கொடுத்து அனுப்பியுள்ளார்.
இருப்பினும் வயிற்றுவலி தொடரவே, சிடி ஸ்கேன் செய்து பார்த்ததில் அவரது வயிற்றுக்குள் 1. 5 கிலோ கிராம் எடை கொண்ட தலைமுடி பந்து போன்று சுருண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலம் சிறுமியின் வயிற்றில் இருந்த தலைமுடி வெளியே எடுக்கப்பட்டு தற்போது உடல்நலம் தேறியுள்ளார்.
இனி இவர் முறையாக உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.




