திருமணத்திற்கு பத்து பொருத்தங்களும் பொருந்துகிறதா? இல்லாவிட்டால் பரிகாரங்கள் செய்யலாம்!

0

திருமணத்திற்கு நட்சத்திர ரீதியாக பத்து பொருத்தங்கள் பார்க்கும்போது பத்துக்கு பத்து பொருத்தம் அதிகம் யாருக்கும் அமைவதில்லை. அதிகப்படியாக எட்டு பொருத்தங்கள் மட்டுமே அமைகிறது. பத்துக்கு ஆறு பொருத்தங்கள் மட்டுமே இருந்தால் போதும் என ஜோதிடர்கள் கூறினாலும் பலர் இதை ஏற்றுக் கொள்வதில்லை. குறைவான பொருத்தங்களுடன் திருமணம் செய்து கொள்வதற்கு மனதில் சிறிய தயக்கம் இருக்கும். அத்தகையவர்கள், எந்த பொருத்தம் இல்லையோ அந்த பொருத்தத்திற்குரிய பரிகாரங்களை செய்து கொண்டால் மிக சிறப்பான வாழ்க்கை அமையும்.

தினப்பொருத்தம் இல்லையென்றால் சு ரிய நாராயணன் உருவத்தை தன் தகுதிக்கு ஏற்ப தங்கத்திலோ அல்லது வெள்ளியிலோ செய்து கோவில் பு சாரி அல்லது பொருத்தம் பார்த்த ஜோதிடருக்கு தானமாக வழங்க வேண்டும்.

கணப்பொருத்தம் இல்லையென்றால் கணபதி உருவத்தை தன் தகுதிக்கு ஏற்ப தங்கத்திலோ அல்லது வெள்ளியிலோ செய்து கோவில் பு சாரி அல்லது பொருத்தம் பார்த்த ஜோதிடருக்கு தானமாக வழங்க வேண்டும்.

யோனி பொருத்தம் இல்லையென்றால் காமதேனு உருவத்தை தன் தகுதிக்கு ஏற்ப தங்கத்திலோ அல்லது வெள்ளியிலோ செய்து கோவில் பு சாரி அல்லது பொருத்தம் பார்த்த ஜோதிடருக்கு தானமாக வழங்க வேண்டும்.

ராசி பொருத்தம் இல்லையென்றால் உமாமகேஸ்வரர் உருவத்தை தன் தகுதிக்கு ஏற்ப தங்கத்திலோ அல்லது வெள்ளியிலோ செய்து கோவில் பு சாரி அல்லது பொருத்தம் பார்த்த ஜோதிடருக்கு தானமாக வழங்க வேண்டும்.

ராசி அதிபதி பொருத்தம் இல்லையென்றால் சீதா-ராமர் உருவத்தை தன் தகுதிக்கு ஏற்ப தங்கத்திலோ அல்லது வெள்ளியிலோ செய்து கோவில் பு சாரி அல்லது பொருத்தம் பார்த்த ஜோதிடருக்கு தானமாக வழங்க வேண்டும்.

ரஜ்ஜு பொருத்தம் இல்லையென்றால் சிவலிங்க உருவம் பொறிக்கப்பட்ட தாலியை தங்கத்திலோ அல்லது வெள்ளியிலோ செய்து கோவில் பு சாரி அல்லது பொருத்தம் பார்த்த ஜோதிடருக்கு தானமாக வழங்க வேண்டும்.

வேதை பொருத்தம் இல்லையென்றால் பன்றி அல்லது ஆமை உருவத்தை தன் தகுதிக்கு ஏற்ப தங்கத்திலோ அல்லது வெள்ளியிலோ செய்து கோவில் பு சாரி அல்லது பொருத்தம் பார்த்த ஜோதிடருக்கு தானமாக வழங்க வேண்டும்.

திருமணப் பொருத்தம் பார்க்கும்போது பத்து பொருத்தங்களை தவிர ஆண், பெண் இருவருக்கும் ஏக தசா சந்திப்பு வருகிறதா என ஆராய வேண்டும். தசா சந்திப்புக்கு பரிகாரமாக சிவமந்திர ஜெபம், சிவபஜனம், பிரதோசவிரதம் ஆகியவற்றை மேற்கொள்ளலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபெண்கள் குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காக?
Next articleஎந்த கிழமையில் எந்தெந்த கடவுளை வணங்கலாம் ?