Home thatstamil one india tamil oneindia tamil படுத்தவுடன் நிம்மதியான உறக்கம் வேண்டுமா? இப்படி செய்யுங்கள்!

படுத்தவுடன் நிம்மதியான உறக்கம் வேண்டுமா? இப்படி செய்யுங்கள்!

0
192

படுத்தவுடன் நிம்மதியான உறக்கம் வேண்டுமா? இப்படி செய்யுங்கள்!

  • தூக்கமின்மை பிரச்சனை இருந்தால் அடுத்த நாள் முழுவதும் உற்சாகம் இழந்து காணப்படலாம்.
  • மன அழுத்தம், பிரச்சனை போன்றவைகளுக்கு இடம்கொடுக்காமல் நிம்மதியாக உறங்குவது முக்கியம்

ஒரு சமயத்தில் வயதானவர்களுக்கு மட்டும் தான் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும். ஆனால் தற்போதெல்லாம் இளைய தலைமுறையும் அந்த சிக்கலுக்கு ஆளாகின்றனர்.

தூக்கமின்மைக்கு முதல் காரணம் நீங்கள் கையில் வைத்திருக்கும் செல்போன் தான் என்றால் அது மிகையாகாது. இன்று செல்போனால் நிறைய பேருக்கு தூக்கம் என்பது குறைவாகவே காணப்படுகிறது. இதனால் நாள் முழுவதும் உற்சாகம் இழந்து, செய்யும் செயலில் முழுமையான ஈடுபாட்டை காண்பிக்க முடியாமல் போய் விடுகிறது.

படுத்த உடனேயே சிலருக்கு எல்லாம் தூக்கம் எப்படி தான் வருகிறது என்று நாம் பலமுறை பொறாமை பட்டு இருப்போம். அது போல் நாமும் படுத்தவுடனே எப்படி தூங்குவது?

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான மாட்டுப் பால் இரவில் படுக்கும் முன்பு குடித்தால் சீக்கிரம் தூக்கம் வந்துவிடும்.

வாழைப்பழம் இயற்கையாகவே இரவில் சிறந்த தூக்கத்தை தர வல்லது. முதியோர்கள் அதிக இரத்த அழுத்தத்தால் தூக்கம் வராமல் தவிக்கும் போது வாழைப்பழங்களை சாப்பிட்டால் எளிதில் தூக்கம் வந்துவிடும்.

தண்ணீரில் சிறிதளவு சீரகம் சேர்த்து கொதிக்கவைத்து, அதோடு கொஞ்சம் தேன் கலந்து இரவில் குடித்துவர தூக்கமின்மை பிரச்சனை சரியாகும்.

தினமும் உணவுடன் தயிரை உட்கொண்டு வந்தால் இரவில் நல்ல உறக்கத்தை பெறலாம்.

வேப்பிலையை எடுத்து மிதமான சூட்டில் நன்கு வறுத்து அதை தலையில் வைத்து உறங்கினால் நன்றாக தூக்கம் வரும்.

முக்கிய குறிப்பு: மன அழுத்தம், பயம், பதட்டம், எதிர்கால பயம் என பல விஷயங்கள் மனதில் ஓடிக்கொண்டிருந்தாலும் தூக்கம் தடைபடும். இதை மனதளவில் அணுக வேண்டிய விஷயம் என்பதால் இதை அப்படியே விடாமல் உளவியல் நிபுணர், மனநல ஆலோசகரை அணுகி தீர்வு காணுதல் அவசியம். தூக்கமின்மையால் இரவுகளை தொலைக்காதீர்கள்.

Previous articleநீங்கள் இந்த‌ தேதிகளில் பிறந்தவர்களா? அதிர்ஷ்டசாலிகள்தான்!
Next articleஉணவுப்பொதி, தேநீர் விலை குறைக்க‌ப்படும், வெளியான தகவல்!