படர் தேமல் போக்கி அழகு பெற இயற்கை மருத்துவம் !

0

தேமல் ஒரு வகையான தோல் நோய். இதில் வெள்ளைத்தேமல், கருந்தேமல், ரத்த தேமல், சொறித்தேமல் புள்ளி மற்றும் படர் தேமல், காளான் வகை தேமல் என பல வகை தேமல்கள் உள்ளன.

சருமத்தை சுத்தமாக பராமரிக்காமல் இருப்பதே பலருக்கு தேமல் வரக் காரணமாகிறது.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அத்தோல் நோய்க்கு உள்ளாகிவிடுகின்றார்கள், இதற்கு நிரந்தர தீர்வு சித்த மருத்துவமே.

கீழாநெல்லி இலை, கொத்துமல்லி இலை ஆகியவற்றை பாலில் அரைத்து முகத்தில் தேமல், கரும்புள்ளி உள்ள பகுதிகளில் பூசி முப்பது நிமிடங்கள் கழித்துக் குளித்து வந்தால் தேமல், கரும்புள்ளி ஆகியவைகள் மறையும்.

முள்ளங்கிச் சாறு, எலுமிச்சைச் சாறு, தக்காளிச் சாறு மூன்றையும் கலந்து தேமல் உள்ள இடத்தில் தினமும் தடவி 10 நிமிடம் கழித்து குளித்து வரவேண்டும்.

நாயுருவி இலை சாறை தடவி வந்தால் தேமல், படை குணமாகும்.

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து தினமும் உடம்பிற்கு தேய்த்து குளித்து வரவும்.

நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து சர்க்கரை சேர்த்து குடித்தால் தேமல் மறையும்.

எலுமிச்சை பழச்சாறு தேமல் உள்ள இடங்களில் தேய்த்தால் தேமல் மறையும்.
எலுமிச்சை தோலை உலர்த்தி தூளாக்கி சம அளவு பொரித்த படிகாரத்தை சிறிது தண்ணீர் சேர்த்து குழைத்து தேமலில் பூசி குளித்து வரலாம்.

மஞ்சள் இடித்து நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி தேமல் மேல் தேய்த்து வரலாம் .

துளசி இலை, வெற்றிலை எடுத்து அரைத்து தேமல் மேல் பூசினால் தேமல் நீங்கும்.

சுக்குடன் சிறிது துளசி இலைகளை வைத்து மையாக அரைத்து தேமல் மீது பூசி வர தேமல் மறைந்து, சருமம் இயல்பு நிலை அடையும்.

தொட்டாற்சுருங்கி இலையை நன்கு அரைத்து அதன் சாற்றை தேமல் உள்ள இடங்களில் காலையிலும் மாலையிலும் தடவிவந்தால் ஐந்தே நாட்களில் தேமல் பறந்து போய்விடும்.

கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் மறையும்.

வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

தேங்காய் எண்ணெய் (200 மிலி), மெழுகு, தேன் (20 மிலி). எண்ணெயை சூடு செய்து மெழுகை இட்டு நன்கு உருகியவுடன், தேனையும் அதில் கலந்து ஆறவிடவேண்டும். ஆறியவுடன் பசை போலாகும். இப்பசையை தேமல் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வர குணமாகும்.

முட்டையோட வெள்ளைக்கரு, வெந்தயம், வெள்ளரிப் பிஞ்சு இந்த மூன்றையும் சேர்த்து அரைத்தும் தடவலாம்.

வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

சந்தனத்தை எலுமிச்சைச் சாற்றில் கலந்து தேமல் உள்ள இடத்தில் தடவி வரலாம்.

மோரில் முள்ளங்கியை அரைத்து இந்தக் கலவையை முகத்தில் தேய்த்தால் தேமல் மறையும்.

1 துண்டு வசம்புடன் பூவாரம்பட்டை சேர்த்து அரைத்து இரவில் பற்றுப் போட்டு வந்தால் நாளடைவில் தேமல் குணமாகும்.

வேப்பிலைகளை அரைத்துத் தேமல் மீது தடவிவர தேமல் மறையும்.

குப்பை மேனிக் கீரையை எடுத்து அதனோடு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து மை போல அரைத்து தேகத்தின் மீது தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வர தேமல் மறையும்.

மணத்தக்காளிக் கீரையின் சாற்றை எடுத்து உடம்பில் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து வெது வெதுப்பான நீரில் குளித்து வர தேமல் மறைய தொடங்கும்.

அறிகுறிகள்: தேமல்.

தேவையானவை: கசகசா, நீரடிமுத்து, கடலை மாவு.

செய்முறை: 10 கிராம் கசகசாவுடன், 10 கிராம் நீரடிமுத்து சேர்த்து மையாக அரைத்து அதை தேமல் உள்ள இடங்களில் பூசி ஒரு மணி நேரம் கழித்து கடலை மாவு தேய்த்து குளித்து வந்தால் தேமல் அகலும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைச் சரியாக வைத்திருக்க !
Next articleதேமல் குணமாக புடலங்காய் மற்றும் சீயக்காயினை இப்படி செய்து பாருங்க!