Home Patti Vaithiyam பச்சையாக பூண்டு சாப்பிடுபவரா! இனிமேல் சாப்பிடாதீங்க!

பச்சையாக பூண்டு சாப்பிடுபவரா! இனிமேல் சாப்பிடாதீங்க!

0
461

நெஞ்சு வலி மற்றும் தமனித் தடிப்பு போன்ற இதயக் குழலிய பிரச்சனைகளில் இருந்து நம் இதயத்தை பூண்டு பாதுகாக்கும்.

இதில் இதய பாதுகாப்பு குணத்திற்கு பல காரணங்கள் அடங்கியுள்ளன. வயது ஏற ஏற விரிவடையும் திறனை தமனிகள் இழக்கத் தொடங்கும். இதனை குறைக்க பூண்டு உதவும்.

பூண்டில் உள்ள சல்பர் கலந்த பொருட்கள் ரத்த குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும். மேலும் தமனித் தடிப்பு வளர்ச்சியையும் மெதுவாக்கும். அஜோனின் ரத்த உறைதல் எதிர்ப்பு குணங்களால் இதயத்துக்குள் ரத்த கட்டிகள் உருவாகாமல் தடுக்க உதவும்.

பச்சை பூண்டை சாப்பிட்டால் கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை சரியாக செயல்படும் மற்றும் வயிற்று பிரச்சனைகளும் நீங்கும். குறிப்பாக அஜீரணம் மற்றும் பசியின்மை போன்றவை நீங்கும்.

நம் ரத்த ட்ரைகிளிசரைடுகள் மற்றும் மொத்த கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மையும் தமனி பிளேக் உருவாக்கத்தை குறைக்கும் தன்மையும் பூண்டில் அதிகமாக உள்ளது.

பச்சை பூண்டு மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவும். வயிற்றில் புழுக்கள் இருந்தால் அதனை வெளியேற்ற தினமும் ஒரு பச்சை பூண்டை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி புழுக்களும் வெளியேறிவிடும்.

பூண்டை தினசரி பயன்படுத்தி வந்தால் சளி தொல்லை குறையும். அதிலுள்ள பக்டீரியா எதிர்ப்பு குணங்கள் தொண்டை எரிச்சல்களை குணப்படுத்த உதவும்.

மேற்பகுதி சுவாசப் பாதை தொற்றுக்களின் தீவிரத்தை குறைக்க பூண்டு உதவிடும். ஆஸ்துமா, சுவாசிப்பதில் சிரமம் போன்ற நுரையீரல் கோளாறுகளுக்கும் இது பயனளிக்கும்.

ஒரு நாளைக்கு 1-2 பல் பூண்டு சாப்பிடுவது நல்லது. பச்சையாக பூண்டு சாப்பிடுவது சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். அதுவும் உடலில் கொப்புளங்கள் வருவது, உடலின் வெப்பநிலை அதிகரிப்பது, தலைவலி ஏற்படுவது போன்றவை இருந்தால் உடனே பூண்டை பச்சையாக சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.

Previous articleபடுக்கையறையில் அதிக இன்பம் பெற இதில் தினமும் ஒரு ஸ்பூன் எடுங்க!
Next articleமேஷம் – விகாரி வருட பலன்கள் 2019-2020 !