நோய் வராமல் வாழ ஆசையா? அப்ப துளசியை இப்படி யூஸ் பண்ணுங்க!

0

மூலிகைகளின் தாய் மற்றும் ராணி தான் துளசி. இந்த சிறு இலை பல மகிமைகளைச் செய்யும். அதிலும் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும் மூலிகைகளில் துளசியை விட சிறந்தது எதுவும் இருக்க முடியாது. இதற்கு அதில் உள்ள சத்துக்கள் தான் காரணம். குறிப்பாக துளசியை உட்கொண்டு வந்தால், சுவாச கோளாறுகளைத் தடுக்கலாம்.

மேலும் துளசி இலை சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுத்து, நல்ல பொலிவான சருமத்தைப் பெற உதவும். இந்த துளசியானது எண்ணெய் மற்றும் மாத்திரை வடிவங்களில் கடைகளில் விற்கப்படுகிறது. இருப்பினும் இதன் இலைகளை பச்சையாக உட்கொண்டால், இதன் பலனை முழுமையாகப் பெறலாம்.

நோய் வராமல் நலமாக வாழ ஆசைப்படுபவர்கள துளசி இலையில் இரண்டு கைப்பிடி எடுத்து சுத்தமான பாத்திரத்தில் இட்டு ஒரு டம்ளர் நீர் விட்டு மூடி வைத்துவிட வேண்டும். இதை மாலை நேரத்தில் செய்வது நல்லது. காலையில் அந்த நீரை எடுத்து வெறும் வயிற்றில் குடித்துவிட வேண்டும். அடுத்து 21 நாட்கள் இடைவெளி விட்டு மறுபடியும் 21 நாட்கள் தொடர்ந்து அருந்த வேண்டும். இவ்வாறு தொடர்ந்து அருந்தினால் நோயே அணுகாது.

டான்சில் கோளாறு

உள்நாக்கு சதை என்ற டான்சில் கோளாறுக்கு துளசி தைலத்தை அரைத் தேக்கரண்டி வாயிலிட்டு தொண்டை வரை எட்டுமாறு செய்து பின்பு கொப்பளித்து வர குணம் தெரியும்.

டான்சில் சதை வளர்ச்சி தொண்டையின் இருபுறமும் இருந்தால் தொடர்ந்து ஒரு வாரமாவது மேற்சொன்னவாறு கொப்பளித்து வர நல்ல குணம் தெரியும்.

துளசி தைலம்

துளசி இலையையும் வில்வ இலையையும் சம அளவு எடுத்து கொள்ள வேண்டும். பிறகு இரண்டையும் சேர்த்து இடித்துச் சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். சாறு உள்ள அளவுக்கு இரண்டு மடங்கு அதிகமாக நல்லெண்ணெய் எடுத்து காய்ச்சி சாறை அதில் ஊற்றி மீண்டும் காய்ச்ச வேண்டும்.

இலைச்சாறு நன்றாக வெந்த சிவந்த மணல் போல் அடியில் தங்கிவிட்டால் தைலம் நல்ல பதமான நிலைக்கு வந்துவிட்டது என்பதை புரிந்துக் கொள்ளலாம். அதனை எடுத்து கண்ணாடி போத்தலில் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தொடர்ந்து தலைவலி இருக்குமானால் வாரத்துக்கு ஒரு தடவையோ, இரண்டு தடவையோ தலைவலியின் தன்மைக்கு ஏற்ப தேய்த்து, பதினைந்து அல்லது இருபது நிமிடங்கள் ஊற வைத்துப் பிறகு சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும். இதனால் எவ்வளவு கடுமையான தலைவலியும் அகன்றுவிடும்.

பால் குடிக்காத குழந்தைகள்

சில குழந்தைகள் தாய்ப் பால் குடிப்பதில் விருப்பம் இருக்காது. இதனால் பசி அடங்காமல் எந்நேரமும் அழுது கொண்டிருக்கும். சில தாய்மார்களின் முலைக்காம்பில் சுரக்கும் ஒருவித திரவம் குழந்தைகளுக்கு வெறுப்பை ஏற்படுத்துவதுதான் இதற்கு காரணமாகும். இந்த குறைப்பாட்டை போக்க துளசி இலையையும், அதிமதுரமும் சம அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை மைப்போல் அரைத்து தாயின் முலைக்காம்பில் தடவி விட வேண்டும். இவ்வாறு இரண்டு நாட்கள் செய்தால் குழந்தை தானாக பாலைக் குடிக்க ஆரம்பிக்கும்.

அதிக தாகம்

காய்ச்சல் உள்ள நேரத்தில் சிலருக்கு அடிக்கடி தாகம் எடுக்கும். இதற்கு இருநுாறு மில்லி அளவுக்கு நீரை எடுத்து நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும். கொதிநீர் சற்று ஆறியதும் 20 துளிகள் துளசி சாற்றைவிட்டு கலக்கி அந்த தண்ணீரை அடிக்கடி கொடுத்து வந்தால் நோயாளியின் தாகம் தணியும்.

மாதவிலக்கு

கருந்துளசி இலைச் சாற்றை தயார் செய்து வேளைக்கு இரண்டு தேக்கரண்டியென, சீரகக் கசாயத்துடன் சேர்த்து சாப்பிட மாதவிலக்கு கோளாறுகள் அகலும்.

பித்தக் கோளாறுகள்

செந்துளசி இலைகளை செப்புப் பாத்திரத்தில் இடவேண்டும். அதில் நீர் விட்டு இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும். அதிகாலையில் அந்த நீருடன் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து 100 மில்லி அளவுக்கு வெறும் வயிற்றில் சாப்பிட பித்தம் தொடர்பான பிணிகள் குணமாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த ஒரு பொருள் போதும் ஆஸ்துமா, மலச்சிக்கல், கண் நோய் பிரச்சனைக்கு உடனடி தீர்வு!
Next articleஉடனே தூக்கி எறியுங்கள்! பிறப்புறுப்பில் அரிப்பு உண்டாக வீட்ல இந்த ஸ்பான்ஞ் இருக்கிறதுதான் காரணம்!