உங்கள் இடது பக்க வயிற்றில் வலியா? அது இந்த நோயாக கூட இருக்கலாம்! அவதானம் மக்களே!

0

உங்கள் இடது பக்க வயிற்றில் வலியா? அது இந்த நோயாக கூட இருக்கலாம்! அவதானம் மக்களே!

அடிவயிற்றின் இடது பக்கத்தில் எத்தகைய பிரச்சனைகள் இருந்தால் வலி ஏற்படும் சந்திக்க நேரிடும் என்பது தொடர்பான விளக்கங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதனை நன்கு கவனமாகப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள். நீங்கள் அடிவயிற்றின் இடது பக்கத்திலான கடுமையான வலியினால் அவதிப்படுகின்றீர்களா?

ஆம் என்றால், அதனை வெறுமனே வலி என்று சாதாரணமாக விட்டுவிடாமல், உடனே அதற்கான காரணத்தை மருத்துவரிடம் சென்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுங்கள்.

ஏனெனில் இது குறிப்பிட்ட சில வகையான நோய்களுக்கான அறிகுறியாக உள்ளதனால் அதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சைப் பெற்று வந்தால், நிலைமை மோசமாவதைத் தடுக்கலாம். இங்கு அடிவயிற்றின் இடது பக்கத்தில் எத்தகைய பிரச்சனைகள் காணப்பட்டால் இத்தகைய வலியினைச் சந்திக்க நேரிடும் என்பது பற்றிய விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை நன்கு தெரிந்து கொள்ளுங்கள்.

சிறுநீர் பாதை தொற்று

பொதுவாக, சிறுநீர் பாதையில் தொற்றுகள் காணப்படும் போது அடிவயிற்றின் இடது பக்கமாக வலியை சந்திக்க நேரிடுவதுடன், சிறுநீர்ப்பை அழற்சி அடிவயிற்றின் இடது பக்கத்தில் வலி ஏற்படுவதற்கு மற்றொரு காரணமாக உள்ளது. இந்த நிலை ஒருவருக்கு காணப்படின், அடிவயிற்று வலியுடன், அடிக்கடி சிறுநீர் கழிக்கவும் நேரிடும். மேலும், மலச்சிக்கல், மலச்சிக்கலுடன் வயிற்றில் வாய்வு அதிகமாக தேங்கி அசௌகரியமாக உணர்தால் போன்றனவற்றின் போதும் அடிவயிற்றின் இடது பக்கத்தில் வலி ஏற்படும்.

எரிச்சல் கொண்ட குடல் நோய்

குடலில் அழற்சி தன்மை காணப்பட்டு, அசாதாரண இடைவெளியில் மலச்சிக்கல் அல்லது வயிற்றுப் போக்கு ஏற்படும் போது அவருக்கு எரிச்சல் கொண்ட குடல் நோய் காரணமாக அடிவயிற்றின் இடது பக்கத்தில் வலிக்கும்.

கிரோன் நோய்

செரிமான பாதைகளில் ஏற்படும் ஒரு அழற்சி நோயாகிய கிரோன் நோயின் மிகப் பிரதானமான அறிகுறியாக அடிவயிற்றின் இடது பக்கத்தில் ஏற்படும் வலி காணப்படுகின்றது.

சிறுநீரக கற்கள்

சிறுநீரக கற்கள் காணப்படும் போது, இடுப்பு மற்றும் அடிவயிற்றின் இடது பக்கத்தில் கடுமையான வலியினை உணர முடியும்.

எக்டோபிக்ஃ இடம் மாறிய கர்ப்பம்

திருமணமாகி கருத்தரித்த பெண்களிற்கு அடிவயிற்றின் இடது பக்கத்தில் வலி காணப்படின், சிசு கருப்பையினுள் வளராமல், இடது பாலோப்பியன் குழாயினுள் வளர்கின்றது என்று அர்த்தமாம்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசிவலிங்கத்தின் மீது காலை வைத்த முஸ்லீம் நபர்: சமூகவலைதளத்தில் வைரலான புகைப்படம்!
Next articleவெளியில் கசிந்த ரகசியம்: உயிரை விட்ட இளம் விதவை!