Home Patti Vaithiyam இரைப்பையில் அதிகமான அமிலம் சுரப்பதால் ஏற்படும் நெஞ்செரிச்சல் மற்றும் அசெளகரியங்களை கட்டுப்படுத்த இவற்றை செய்யுங்கள்!

இரைப்பையில் அதிகமான அமிலம் சுரப்பதால் ஏற்படும் நெஞ்செரிச்சல் மற்றும் அசெளகரியங்களை கட்டுப்படுத்த இவற்றை செய்யுங்கள்!

0
2680

இரைப்பையில் அதிகமான அமிலம் சுரப்பதால் ஏற்படும் நெஞ்செரிச்சல்

நம்முடைய பாரம்பரியமான உணவுப்பழக்கங்கள் மாற ஆரம்பித்த நாட்களிலிருந்து செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் கிளம்ப ஆரம்பித்து விட்டன அதற்கு காரணம் நம் நாட்டின் தட்பவெட்ப சூழலுக்கு ஒவ்வாத உணவுகளை தொடர்ந்து எடுத்து வருவதால் தான்.

பெரும்பாலானோருக்கு நெஞ்செரிச்சல் பிரச்சனை ஏற்படு. வழக்கமாக இதனை சாதரண நெஞ்செரிச்சல் என்று சொன்னாலும் இது நெஞ்சில் ஏற்படுவதில்லை இது உணவுக்குழாயில் ஏற்படுகிற பிரச்சனை.

காரணம் :

நாம் சாப்பிடும் உணவு உமிழ்நீருடன் கலந்து முதற்கட்டமாக செரிமானம் செய்யும் . அது முடிந்த பின்னர் உணவுக்குழாய் மூலமாக உணவு இரைப்பைக்குச் செல்லும். உணவுக்குழாயில் மேல் முனையில் இருக்கும் கதவு நாம் சாப்பிடும் உணவை மூச்சுக் குழாய்க்குள் செல்வதை தடுக்கிறது.

உணவுக்குழாய்க்கு கீழ் இருக்கும் கதவு, இரைப்பையில் சுரக்கும் அமிலத்தை உணவுக்குழாய்க்குள் நுழைய விடாமல் தடுக்கிறது. இரைப்பையில் சுரக்கும் அமிலம் இந்த எல்லைக் கோட்டை கடந்து, உணவுக் குழாய்க்குள் தேவையில்லாமல் நுழைவதுதான் நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம்.

இரைப்பை அமிலம் :

மிகவும் இனிப்பு, காரம், எண்ணெய், கொழுப்பு மிகுந்த உணவு வகைகளை தினமும் சாப்பிட்டால் உணவுக் குழாயின் கீழ்முனைக் கதவு ‘தொளதொள’வென்று தொங்கிவிடும். இதனால் இரைப்பையில் இருக்கும் அமிலம் மேல்நோக்கி வரும்போது, அதைத் தடுக்க முடியாமல், உணவுக் குழாய்க்குள் அனுமதித்துவிடும்.

இரைப்பையில் அளவுக்கு அதிகமாக சுரக்கப்படும் அமிலம் அது உணவுக் குழாயின் கீழ்ப் பகுதிக்குச் சென்று காயத்தை ஏற்படுத்தும். ‘அல்சர்’ எனப்படும் இரைப்பைப் புண் உள்ளவர்களுக்கு இப்படித்தான் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.

உணவுக் குழாயின் தசைகள் காரம் , சூடு, குளிர்ச்சியான உணவுகளைத் தாங்குமே தவிர, அமிலத்தின் வீரியத்தைத் தாங்கும் சக்தி அவற்றுக்கு கிடையாது. இதனால் அமில அலைகள் அடிக்கடி மேலேறி வரும்போது, அங்குள்ள படலத்தை அரித்துப் புண்ணாக்கிவிடும். இதனால், நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.

யாருக்கெல்லாம் வரும் :

வயிற்றில் அழுத்தம் அதிகரித்தால், நெஞ்செரிச்சல் ஏற்பட வாய்ப்பு அதிகம். உடல் பருமனாக உள்ளவர்கள், கர்ப்பிணிகள், இறுக்கமாக உடை அணிபவர்கள், வயிற்றில் கட்டி உள்ளவர்கள் ஆகியோருக்கு நெஞ்செரிச்சல் உண்டாக இதுவே காரணம்.

மேலும் அதிக கார உணவு, துரித உணவு, கொறிக்கும் உணவு போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவது; காலை உணவைத் தவிர்ப்பது, சரியான நேரத்தில் உணவைச் சாப்பிடாமல் இருப்பது, பசிக்கும் நேரத்தில் சத்துள்ள உணவு வகைகளைச் சாப்பிடாமல், நொறுக்கு தீனிகளை சாப்பிடுவது இரவில் தாமதமாக உறங்குவது, கவலை, மன அழுத்தம் போன்றவை நெஞ்செரிச்சல் ஏற்படுவதைத் தூண்டுகின்றன.

எனவே நெஞ்செரிச்சல் வராமல் தடுக்க மிதமான உணவுகளை எடுத்துக் கொள்வதுடன் இரைப்பையில் அமில சுரப்பை கட்டுப்படுத்தும் உணவுகளையும் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியமானதாகும்.

அரிசி :

அரிசி உணவுகள் வயிற்றில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தை உறிஞ்சும் ஆற்றல் கொண்டது.தினமும் ஒரு வேளை உணவாவது அரிசி உணவாக எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

வாழைப்பழம் :

நெஞ்செரிச்சலை உடனடியாக குறைக்கும் ஆற்றல் வாழைப்பழத்திற்கு இருக்கிறது. வாழைப்பழத்திற்கு இயற்கையாகவே அமில எதிர்ப்பு சக்தி இருப்பதால் வாழைப்பழத்தை தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வர நெஞ்செரிப்பு நோய் ‌விரை‌வி‌ல் ‌குணமா‌கி‌விடும்.

சீரகம் :

சீரகம் இரைப்பையில் அமில சுரப்பை கட்டுப்படுத்த உதவுகிறது. இதனை அப்படியே கூட சாப்பிடலாம். அல்லது தினமும் சீரகம் ஊற வைத்த நீரை குடித்து வாருங்கள்.

ப்ரோக்கோலி :

ப்ரோக்கோலி இரைப்பையில் அமிலச்சுரப்பை கட்டுப்படுத்தக்கூடியது. ப்ரோக்கோலியில் குறைவான அமிலமே இருக்கிறது என்பதால் இதனை வாரம் ஒரு முறையாவது எடுத்துக் கொள்ள வேண்டும்.

அரிசி :

அரிசி உணவுகள் வயிற்றில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தை உறிஞ்சும் ஆற்றல் கொண்டது.தினமும் ஒரு வேளையாவது அரிசியினை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

இஞ்சி :

இஞ்சி செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது. வெறும் வயிற்றில் தினமும் இஞ்சிச்சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தால் உடலில் உள்ள கொழுப்பு குறைக்கப்பட்டு உடல் எடை குறையும். அதே நேரத்தில் இஞ்சி அமிலச் சுரப்பையும் கட்டுப்படுத்துகிறது.

ஆப்பிள் ஜூஸ் :

நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் ஆப்பிள் ஜூஸ் குடிக்கலாம். இதில் குறைந்தளவிலேயே அமிலத்தன்மை உண்டு என்பதால் வயிற்றில் நிறைவுத்தன்மையைத் தரும். அதே சமயத்தில் நெஞ்செரிச்சலையும் கட்டுப்படுத்தும்.

பாதாம் :

நெஞ்செரிச்சல்,அசிடிட்டி வயிற்று வலி போன்ற பிரச்சனையினால் பாதிக்கப்பட்டவர்கள் லாக்டோஸ் இருக்கும் பால் பொருட்களை தவிர்த்திடுங்கள். ஏனென்றால் இது உங்கள் உடலுக்கு அதிகப்படியான கொழுப்பினை சேர்க்கும். செரிமானமும் தடையாகும்.
பாதாம் பால் எடுத்துக் குடிக்கலாம்.

இளநீர் :

இயற்கையாகவே நமக்கு கிடைத்திடும் வரப்பிரசாதம் இளநீர் உடனடியாக மாற்றம் தெரிய வேண்டும் என்றால் இளநீரை நீங்கள் தாராளமாக குடிக்கலாம். இளநீரில் இருக்கக்கூடிய பயோஆக்டிவ் என்சைம்கள் உணவு செரிமானத்திற்கும் உதவிடும். இதிலிருக்கும் பொட்டாசியம் அமிலச்சுரப்பை கட்டுப்படுத்துகிறது.

சாப்பிடுவதில் மாற்றம் :

சிலருக்கு அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்படும். இப்படியான பிரச்சனை உங்களுக்கு இருந்தால் நீங்கள் சில உணவுகள் அதிகமாக எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் அதனை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும், அல்லது குறைக்க வேண்டும். காபி, டீ மற்றும் அதிக கேஃபைன் கலந்த பானங்கள் தவிர்த்திட வேண்டும்.

உங்களுக்கு அமிலச்சுரப்பு அதிகமிருந்தால் சாக்லேட் தவிர்த்திட வேண்டும். ஏனென்றால் சாக்லெட்டில் methylxanthine இருக்கிறது. இவை அமிலச்சுரப்பை அதிகப்படுத்தும் . மதுபானம், சிட்ரஸ் பழங்கள்,எண்ணெயில் பொறித்த உணவுகளை தவிர்த்தல் நலம்.

நெஞ்செரிச்சலை தவிர்க்க, நேரத்துக்கு உணவைச் சாப்பிடுங்கள். தேவையான அளவுக்குச் சாப்பிடுங்கள். அதிகச் சூடாக எதையும் சாப்பிடாதீர்கள். வேகவைத்த, ஆவியில் அவித்த உணவு மற்றும் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளையும் பழங்களையும் அதிகரித்துக் கொள்ளுங்கள்.

அவசரமாகச் சாப்பிடுவது தவறு. அப்படி நீங்கள் சாப்பிடும்போது, உணவோடு சேர்ந்து காற்றும் இரைப்பைக்குள் நுழைந்துவிடும். இதனால், நெஞ்செரிச்சல் அதிகமாகும்.சாப்பிட்டவுடன் படுக்காதீர்கள். குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்துப் படுக்கச் செல்லுங்கள். படுக்கையின் தலைப் பகுதியை உயர்த்திக்கொள்வது நல்லது.

By: Tamilpiththan

Previous articleஅலட்சியம் வேண்டாம்! உடலில் வலி இல்லாத கட்டிகள் இருந்தால் புற்றுநோயா?
Next articleஇரத்த தமனிகளில் ஏற்படும் அடைப்புகளை நீக்கும் உணவுகள்!