ஆண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சனைகளுள் ஒன்று தான் நீர் போன்ற விந்து வெளிவருவது. சாதாரணமாக ஆண்களின் விந்து வெள்ளையாக, தெளிவாக, ஓரளவு கெட்டியாக இருக்கும். ஆண்களின் விந்து எவ்வளவு கெட்டியாக உள்ளதோ, அவ்வளவு விந்து செல்கள் அதில் உள்ளது என்று அர்த்தம். விந்து செல்கள் குறைவாக இருக்கும் போது தான், விந்து மிகவும் நீர் போன்று இருக்கும். விந்து நீர் போன்று இருப்பதற்கு வயது, உடல் பருமன், சுய இன்பம் காணுதல், ஆரோக்கியமற்ற டயட், ஜிங்க் குறைபாடு, புகைப்பிடித்தல், அதிகளவு மது அருந்துதல் போன்றவை காரணங்களாகும். பொதுவாக ஒருவரது பாலியல் ஆரோக்கியம் மைய நரம்பு மண்டலத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஸ்டெராய்டு மருந்துகளை பயன்படுத்துவதன் மூலம் ஆண்களின் உடல் மட்டுமின்றி பாலியல் வாழ்க்கையும் பாதிக்கப்படும். ஆண்கள் கவலைப்படும் நீர் போன்ற விந்துவின் அடர்த்தியை அதிகரிக்க மருந்து மாத்திரைகளை நாடுவதற்கு பதிலாக, இயற்கை வழிகளின் மூலம் தீர்வு கண்டால், எவ்வித பக்கவிளைவும் இல்லாமல் விந்துவின் அடர்த்தி அதிகமாகும்.