நீங்க சாப்பிடற சாப்பாட்டுல 5 தோஷம் இருக்கு தெரியுமா? அது என்னென்ன? எப்படி சரிபண்ணலாம் !

0

உயிரையும் உடலையும் ஆரோக்கியமான தூணாக தாங்கிப் பிடிக்கக் கூடியது. அப்படி நம்முடைய உயிரைத் தாங்கும் உணவை எந்த இடத்தில் வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று நினைப்பது மிகத் தவறு. ஆனால் இன்றைய சூழலில் ஏதாவது ஒரு ஹோட்டலில் காசைக் கொடுத்து சாப்பிட்டு வருகிறோம். உணவு என்பது வெறுமனே வயிரை நிரப்புகின்ற விஷயமோ அல்லது காசை கொடுத்து வாங்கும் விஷயமோ கிடையாது. நம்முடைய உயிரைத் தாங்கி நிற்கின்ற உணவு எந்த இடத்தில், எப்படி, யாரால் சமைக்கப்படுகிறது, யாரால் பரிமாறப்படுகிறது என்பதெல்லாம் மிக மிக முக்கியம். பசிக்கு தானே சாப்பாடு. சமைப்பவரும் பரிமாறுபவரும் பற்றி நமக்கு என்ன கவலை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதற்கு மிக முக்கியக் காரணம் உண்டு. உணவில் ஆச்சாரம் அதனால் தான் ‘உணவில் ஆசாரத்தை கடைப்பிடி’ என்று சான்றோர்கள் சொல்லி வைத்திருக்கின்றனர். இங்கே ஆசாரம் என்பதற்கு சுத்தம் என்று பொருள்.

நாம் உண்ணும் உணவில் ஐந்து வகையான தோஷங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவை என்னென்ன தெரியுமா? அர்த்த தோஷம், நிமித்த தோஷம், ஸ்தான தோஷம், குண தோஷம், சம்ஸ்கார தோஷம் ஆகிய ஐந்து தோஷங்கள் தான். இவை ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாகப் பார்க்கலாம்.

அர்த்த தோஷம் நேர்மையற்ற வழியில் ஒருவர் சம்பாதிக்கிற பணத்தைக் கொண்டு வாங்கப் படுகின்ற பொருள்களை வைத்து சமைத்து நமக்குப் பரிமாறினால் அந்த நேர்மையற்ற வழியில் வந்த பணத்தின் கெட்ட குணம் நம்மையும் பீடித்துக் கொள்ளும். அதாவது இதன் இன்னொரு பெயர் பொருள் தோஷம். அப்படி நியாயமில்லாத வழியில் வந்த பொருளை நியாயமில்லாத ஆள் கையால் பரிமாறப்பட்டு சாப்பிட்டால் அந்த கெட்ட குணம் அதை சாப்பிடும் நமக்கும் வரும். நமக்கு நியாயமில்லாமல் குறுக்கு வழியில் பொருள் தேட வேண்டும் என்ற ஆசை வரும். அப்படி சாப்பிட்ட உணவு முழுமையாக ஜீரணமடைந்த பின்னர் தான் அந்த தோஷம் நம்மை விட்டு விலகும்.

காரண தோஷம் (நிமித்த தோஷம்) நாம் சாப்பிடுகினன்ற உணவு சமைக்கப்பட்ட பொருள் மட்டும் நல்ல வழியில் இருந்தால் போதாது. அந்த உணவை சமைக்கும் நபரும் நல்ல மனதுடன் இருக்க வேண்டியது அவசியம். அப்படி மற்றவர்களுக்காக உணவை சமைக்கிறவர் அன்பும் நல்ல சுபாவமும் கொண்டவராக இருக்க வேண்டும். அதேபோல் சமைக்கும் உணவை மற்றவர்கள் சாப்பிடும் முன்பு பல்லி, காகம், நாய், எறும்பு ஆகியவை தீண்டக்கூடாது. அதேபோல் தலைமுடி மற்றும் தூசி சாப்பாட்டில் விழக்கூடாது. இந்த தவறுகள் ஏதேனும் அந்த உணவில் இருந்தால் அதை சாப்பிடுகிறவர்களுக்கு நிமித்த தோஷம் உண்டாகும்.

இட தோஷம் (ஸ்தான தோஷம்) நாம் சாப்பிடுகின்ற உணவு சமைக்கப்படுகிற இடமும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. சமைக்கும் இடத்தில் நல்ல அதிர்வுகளும் நேர்மறை ஆற்றல்களும் இருக்க வேண்டும். சமைக்கின்ற போது தேவையில்லாத பிரச்சினைகள், தேவையற்ற விவாதங்கள் ஆகியவற்றை நிச்சயம் தவிர்க்க வேண்டும். ஏனென்றா்ல அதனால் கூட அந்த உணவு அசுத்தப்படும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. அதேபோல் கழிவறை, ஹாஸ்பிடல், போர்க்களம், கோர்ட் போன்ற இடங்களுக்கு அருகில் உணவு சமைப்பது கூடாது. ஆம். நாம் ஒருவருக்கு படைக்கும் உணவை, உள்ளன்புடன் பரிமாற வேண்டியது மிகவும் அவசியம்.

குண தோஷம் நாம் சமைக்கின்ற உணவுகளில் அடங்கி இருக்கும் பொருட்கள், சாத்வீகம் என்று சொல்லப்படுகின்ற அமைதியான குணமுடை பொருள்கள் இருக்க வேண்டும். குறிப்பாக, பால், நெய், அரிசி, மாவு, பருப்பு போன்றவையாக இருக்க வேண்டும். புளிப்புச்சுவை, காரம், உப்பு உள்ளிட்டவை ராஜ சிகமான பொருள்கள் என்று சொல்லப்படும். பூண்டு, வெங்காயம், மாமிசம், முட்டை போன்ற பொருள்கள் தாமஸ குணம் கொண்ட பொருள்கள் என்று சொல்லப்படும். சாத்வீக உணவுகளைச் சாப்பிடுவது ஆன்மிக எண்ணங்களில் முன்னேற்றத்தைத் தருகிறது. மற்றவை சுய நல எண்ணங்களையும் தீய எண்ணங்களையும் தூண்டுவதாகக் கூறப்படுகிறது. இதனால் சமைக்கும்போது அதில் சேர்க்கிற உணவுகளின் குணங்கள் மிக அவசியம்.

சமஸ்கர தோஷம் எவ்வளவு தான் நாம் சசாப்பிடுகிற உணவு தூய்மையாகப் பார்த்து பார்த்து சமைத்தாலும் அந்த உணவுகள் வகைகளில் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டதாக இருத்தல் கூடாது. அதாவது அளவுக்கு அதிகமாக வேக வைப்பது, குழைப்பது, அதிகம் வறுத்தல் போன்ற பக்குவத்தை மிஞ்சிய விஷயங்களைச் செய்யக்கூடாது. இந்த ஐந்து தோஷங்களும் நாம் சாப்பிடும் உணவில் இருக்கக்கூடாது என்பதற்காகத் தான் நம்முடைய முன்னோர்கள் வீட்டில் அம்மா மற்றும் மனைவியால் கையால் சமைத்த உணவுகளை மட்டுமே சாப்பிட்டார். ஹோட்டல் உணவுகளை நாடுவதில்லை.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த ஐஞ்சு அறிகுறி வந்தா பொண்ணுங்களுக்கு மாதவிலக்கு முன்கூட்டியே வரப்போகுதுனு அர்த்தம் !
Next articleமாதவிடாய் நாட்களில் பெண்கள் தா.ம்.ப.த்.தியத்தில் நாட்டம் கொள்வது பற்றி சில‌ பெண்களின் கருத்து என்ன!