நீங்க இந்த நேரத்தில் பிறந்தீங்களா!..ஓஹோன்னு இருப்பீங்களாம்!

0
1305

ஜோதிடத்தில் ஒருவர் பிறந்த நேரத்தை வைத்து அவர்களின் குணாதிசயங்களைப் பற்றி கூறிவிடலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?

அதிகாலை 6-8

அதிகாலையில் இந்த நேரத்தில் பிறந்தவர்கள் அமைதியான மனோபாவம் கொண்டிருப்பதுடன், சிலர் அதிக நேரத்தை வீணடிக்கும் பழக்கத்தையும் கொண்டிருப்பார்கள், இதனால் அவர்களுடைய எதிர்காலம் பாதிப்படையும்.

காலை 8-10

காலையில் இந்த நேரத்தில் பிறப்பவர்கள் நல்ல நட்பு மற்றும் உறவினர்களை கொண்டிருப்பார்கள். இவர்களின் பொருளாதாரம் சீரான நிலையில் இருப்பதால், இவர்களுடைய வாழ்வில் பணம் முக்கிய பங்கினை வகிக்கும்.

நண்பகல் 10-12

நண்பகலில் இந்த நேரத்தில் பிறந்தவர்கள் செய்யும் அனைத்து காரியங்களுமே வெற்றியாகும். இவர்களது வாழ்க்கை வெற்றிகரமாக அமைவதால், பெருமை கொள்ளும் வகையில் வாழ்வார்கள்.

மதியம் 12-2

மதியம் இந்த நேரத்தில் பிறப்பவர்கள் அதிக பயணம் சார்ந்த எதிர்காலம் கொண்டிருப்பார்கள். இவர்கள் புத்திகூர்மை மற்றும் நல்ல குணத்திற்கு பெயர்பெற்று திகழ்வார்கள்.

மதியம் 2-4

மதியம் 2 மணிக்கு மேல் பிறப்பவர்கள் பணம் சார்ந்த துறையில் சிறந்து விளங்குவார்கள். எதையும் லீகலாக செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை கொண்டிருப்பார்கள்.

மாலை 4-6

இந்த நேரத்தில் பிறந்தவர்கள் பொறுப்பு, கடமை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். திருமணத்திற்கு பின் இருக்கும் வாழ்க்கை இவர்களுக்கு வலிமையாக இருக்கும்.

மாலை 6-8

இந்த நேரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கை தங்களுக்கு நெருக்கமான அல்லது நண்பர்களை சார்ந்து வாழும் விதமாக இருப்பார்கள். சமூக வாழ்க்கையில் அதிகம் இணைந்திருப்பார்கள்.

இரவு 8-10

இரவில் இந்த நேரத்தில் பிறந்தவர்கள் கற்பனை திறமைகள் அதிகம் கொண்டிருப்பார்கள். தங்களுக்கு பிடித்த வேலைகளை மட்டுமே செய்வார்கள், அதிலும் சிறப்பாக இருப்பார்கள்.

இரவு 10-12

இந்த நேரத்தில் பிறந்தவர்கள் வெற்றி, தோல்வியை சமமாக எடுத்துக் கொள்ளும் பண்பினைக் கொண்டிருப்பார்கள். தனது வாழ்வில் ஏற்றத்தாழ்வுகளை எளிதாக கடந்து செல்வார்கள்.

நள்ளிரவு 12-2

இந்த நேரத்தில் பிறந்தவர்கள் அதிக புத்திசாலியாக இருப்பார்கள். ஊடகம் சார்ந்த வேலையில் அதிக கவனம் செலுத்துபவராக இருப்பார்கள்.

நள்ளிரவு 2-4

இந்த நேரத்தில் பிறந்தவர்களுக்கு உணவு சார்ந்த விருப்பம் அதிகம் இருக்கும். குடும்பம் மற்றும் பொருளாதாரத்தில் உயர்ந்த இடத்தினை வகிப்பார்கள்.

Previous articleகண்கள் துடித்தால், நன்மையா? தீமையா?அதிசயிக்க வைக்கும் உண்மை தகவல்!
Next article‘S’ என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பமாகிறதா? முதல்ல இத படிச்சு பாருங்க!