நீங்கள் பிறந்த மாதத்தில், இந்த ஆபத்து உங்களுக்கு நிச்சயம் இருக்குமாம்!

0

கொலம்பியா பல்கலைக்கழத்தை சேர்ந்த நிக்கோலஸ் டடோனிட்டி, ஒருவர் பிறந்த மாதத்தை வைத்து அவர்கள் எந்த நோயினால் பாதிக்கப்படுவார்கள் என்பதை ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடித்துள்ளார்.

ஜனவரி

ஜனவரி மாதத்தில் பிறந்தவர்கள் ஹைப்பர் டென்சன் என்னும் உயர் இரத்த அழுத்தத்தினால் அவஸ்தைப்படுவதாக கூறுகிறார்.

பிப்ரவரி

பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் இதயம் சம்பந்தப்பட்ட நோயான ஒழுங்கற்ற இதய துடிப்பால் கஷ்டப்பட்டுவார்கள் என்று கண்டுபிடித்துள்ளார்.

மார்ச்

மார்ச் மாதத்தில் பிறந்தவர்களின் தமனிகளின் சுவர்களில் கொழுப்புக்கள் தேங்கி தடித்து இருப்பதால், மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறுகிறார்.

ஏப்ரல்

ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்களின், இதயத் தசைகளுக்கு சீராக ரத்த ஓட்டம் செல்வது குறைந்து, கடுமையான நெஞ்சு வலியை சந்திக்கக்கூடும் என்று கூறுகிறார்.

மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட்

இந்த நான்கு மாதங்களில் பிறந்தவர்கள் சற்று வலிமையானவர்களாக இருப்பார்கள். ஆனால் அவ்வப்போது சிறு சிறு உடல் கோளாறுகளை சந்திக்க நேரிடும் என்று கூறுகிறார்.

செப்டம்பர்

செம்டம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் ஆஸ்துமா என்னும் சுவாச நோயால் பாதிக்கப்படுவார்கள் என்பதை கண்டுபிடித்துள்ளார்.

அக்டோபர்

அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் கவனக்குறைவு அதியியக்கக் கோளாறு என்னும் நடத்தைக் கோளாறுகள் மூலம் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறுகிறார்.

நவம்பர்

நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் வைரஸ் நோய்த் தொற்றுகள் மூலம் பாதிக்கப்படுவார்கள் என்று கூறுகிறார்.

டிசம்பர்

டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி பிரச்சனையால் பாதிக்கப்படுவார்கள் என்று கூறுகிறார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபற்களின் இடையே இடைவெளி இருந்தால் இப்படி ஒரு அதிர்ஷ்டமா?
Next article30.07.2018 இன்றைய ராசிப்பலன் – திங்கட்கிழமை!