நீங்க பிறந்த கிழமையை சொல்லுங்க! நீங்கள் இப்படியான குணம் கொண்டவரா! உங்கள் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் !

0

உலகத்தில் பிறந்த பெரும்பாலானோர் தாங்கள் பிறந்த நாளை ஒவ்வொரு வருடமும் மகிழ்ச்சியுடன் கொண்டாட விரும்புகின்றனர். பிறந்த தேதியை நினைவில் கொண்டு அந்த தேதியை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட விரும்பும் நாம், எந்த நாளில் பிறந்தோம் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? திங்களா, செவ்வாயா, புதனா … நீங்கள் எந்த நாளில் பிறந்தீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? தெரியவில்லை என்றால் அதனை கண்டுபிடித்து விட்டு இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள். பிறந்த நாள் குறித்த ரகசியம் இந்த பதிவில் உங்களுக்காக விளக்கப்படுகிறது.

பொதுவாக பிறந்த தேதி மற்றும் நேரம் வைத்து நமது எதிர்காலத்தை கணிக்க முடியும் என்று நமக்கு தெரியும். ஜோடிகம், எண்கணிதம் போன்றவை இந்த குறிப்புகளைக் கொண்டு நமது வாழ்க்கையின் நிலையை நாம் உணர்ந்து கொள்ள நமக்கு வழிகாட்டி வருகின்றன. வெறும் பிறந்த தேதி மற்றும் நேரம் மட்டுமல்ல, பிறந்த நாள் கூட நமது வாழ்க்கையில் மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்கும்.

பிறப்பு எண் மற்றும் பிறந்த நாள்
ஜோதிட ரீதியாக, ஒருவரின் வாழ்க்கையின் எதிர்காலத்தைப் பற்றி முடிவெடுக்க , அவரின் பிறப்பு எண் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால் நீங்கள் பிறந்த நாள், மறைமுகமாக உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்துகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஜோதிடத்தின்படி வார நாட்கள்
ஒவ்வொரு நாளுக்கும் அதற்குரிய சிறப்பு அம்சங்கள் உண்டு. மேலும் குறிப்பிட்ட நாளுக்கு குறிப்பிட்ட கிரகத்தை நிர்ணயிக்கிறது ஜோதிட குறிப்புகள். உதாரணதிற்கு, ஞாயிறு சூரியனுக்குரிய நாள், திங்கள் சந்திரனுக்குரிய நாள், செவ்வாய் செவ்வாய்க்குரிய நாள், புதன் கிழமையை ஆளுவது புதன், வியாழக்கிழமை குரு பகவான் ஆட்சி புரிகிறார், வெள்ளிக்கிழமை சுக்ரனின் ஆதிக்கம், சனிக்கிழமை சனீஸ்வரரின் ஆதிக்கம் நிறைந்த நாளாக உள்ளது.

குணங்கள்
ஜோதிடம் மற்றும் ஒருவரின் குணாதிசயம் ஆகியவற்றுக்கான தொடர்பு என்ன என்பது பற்றி இஙகே பார்க்கலாம். எனவே, ஜோதிட வடிவமைப்பு, நீங்கள் பிறந்த நாளானது மற்றவர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்துகின்ற இயக்கவியல் மீது ஆதிக்கம் செலுத்துவதாக கூறுகிறது. நீங்கள் யார் என்பதும் நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என்பதும் நிர்ணயிக்கப்பட, பிறந்த நாள் ஒரு முக்கிய முடிவெடுக்கும் ஒரு காரணியாக செயல்படுகிறது. நீங்கள் பிறந்த நாளைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான காரியம் அல்ல . ஆகவே உங்கள் பிறந்த நாளை அறிந்து கொண்டு, அந்த நாள் உங்களைப் பற்றி ஜோதிடம் சொல்லும் செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

திங்கள் கிழமை
இந்த நபர் சுய-உந்துதல் உடையவராக இருக்கிறார், மேலும் இரக்கம் மற்றும் இனிமையான தன்மைக்கு அறியப்படுவர். சந்தோசம் மற்றும் துக்கம் ஆகிய இரண்டையும் கருணையோடு அணுகுவார்கள். வாழ்வின் தொடக்க காலத்தில் கல்வியை வெறுக்கும் இவர்கள், பிற்காலத்தில் இவர்களின் ஞானதிற்காக போற்றப்படுவார்கள்.

செவ்வாய் கிழமை
இவர்கள் எப்போதும் மற்றவர் மேல் எரிந்து விழும் மனோபாவம் கொண்டவர்கள். கோபம் உச்சத்தில் இருக்கும் நபர்கள். இந்த் காரணத்திற்காகவே, இவர்கள் உறவில் எப்போதும் விரிசல் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். வாழ்க்கை முழுவதும் ஈகோவுடன் வாழ்வார்கள்.

புதன் கிழமை
ஆன்மிகம் மற்றும் மதம் தொடர்பான செயல்பாடுகளில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். கடவுளுக்கு பயப்படும் இவர்களின் குணம், எதிர்மறை எண்ணம் மற்றும் செயல்பாடுகளை இவர்களை விட்டு ஒதுங்கச் செய்யும். கண்ணியமானவராகவும், தாழ்மையுடனும் நடந்து கொள்வார்கள். பெற்றோருக்கு அதிக மரியாதை செலுத்துவார்கள். இவர்கள் போகும் பாதை பற்றிய தெளிவு இவர்களுக்கு இருப்பதால், இவர்களை ஏமாற்றுவது இயலாத காரியம்.

வியாழக்கிழமை
வியாழக்கிழமையில் பிறந்தவர்கள் புத்திசாலித்தனம் மற்றும் சாகச குணம் கொண்டவர்கள். எந்த ஒரு கடினமான சூழலையும் அவர்களின் அதீத புத்திசாலித்தனத்தால் வெற்றி கொள்வார்கள். அவர்கள் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளிடமிருந்து பெரும் அன்பு மற்றும் ஆதரவைப் பெறுவார்கள். அதிர்ஷ்டம் எப்போதும் அவர்களுக்கு கைகொடுக்கும்.

வெள்ளிக்கிழமை
வெள்ளிக்கிழமை பிறந்தவர்களின் மகிழ்ச்சியான மனநிலை மற்றும் எப்போதும் சந்தோஷமாக இருக்கும் இயல்பு ஆகியவை, ஒரு பெருங்கூட்டதிலும் இவர்களை தனியாக அடையாளம் காட்டும். பேச்சால் அனைவரையும் மயக்கும் தன்மை கொண்டவர்கள் இவர்கள். சுக்கிரன் இவர்களின் ஆட்சி கிரகம் ஆகும். எந்த ஒரு கடினமான காலத்தையும் தீவிர சகிப்புத்தன்மை கொண்டு எதிர்கொள்ளும் தன்மை இவர்களுக்கு உண்டு.

சனிக்கிழமை
விவசாயம், வியாபாரம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் சனிக்கிழமை பிறந்தவர்களுக்கு ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. இளம் வயதில் பல்வேறு கஷ்டங்களை சந்தித்த இவர்கள், வளரும்போது தன்னை சுற்றி இருப்பவர்கள் மீது மிகவும் கவனமாக இருப்பார்கள். குறிப்பாக நண்பர்களிடம் கவனமாக பழகுவார்கள். இவர்கள் தங்கள் பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகளுடன் நெருக்கமாக பழகுவதில் ஒரு வித அசொவரியத்தை உணர்வார்கள்.

ஞாயிற்றுக்கிழமை
ஞாயிறு அன்று பிறந்தவர்கள் வாழ்க்கையை மிகவும் லேசாக எடுத்துக் கொள்வார்கள். வாழ்வின் பிற்பகுதியில் பிரகாசமாக வாழ்வார்கள், அதிர்ஷ்டம் அவர்கள் பக்கம் இருக்கும். கூச்ச சுபாவம் கொண்டவர்கள், மற்றும் மனிதர்களுடன் நெருங்கிப் பழகும் தன்மை மிகவும் குறைவாக இருப்பவர்கள். கலை மற்றும் கல்வித் துறையில் பல சிறப்புகளையும் மரியாதையும் பெறுவார்கள். மதத்தின் மீது அதிக ஈடுபாடு கொள்வார்கள். குடும்ப உறுப்பினர்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ள விரும்புவார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஒரே வாரத்தில் எடை குறைக்க வேண்டுமா அப்போ அன்னாசிப்பழத்தை இப்படி சாப்பிடுங்கள்!
Next articleநிச்சயமான பெண் கிடைக்காததால் வெறித்தனமாக மாறிய வாலிபர்! பின்பு நடந்தது என்ன!