நீங்கள் எந்த திகதியில் பிறந்தீர்கள்! நீங்க டாப்பா வரனும்னா இத பன்னுங்க!

0

ஒருவரது பிறந்த திகதி மற்றும் மாதம், வருடம் மூன்றையும் கூட்டி வரும் எண் ஆகியவற்றை கணித்து பார்த்து பெயர் எண் அமைப்பது நியூமராலஜி (எண்கணித ஜோதிடம்) ஜோதிடம் ஆகும்.

இந்த எண்கணிதத்தின் படி ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு குணம் இருக்கிறது. எந்த திகதிகளில் பிறந்தவர்களுக்கு எந்தத் தொழில் அல்லது எந்த வேலைப் பொருத்தமாக இருக்கும் என்றும் எண் கணிதத்தின்படி கூறலாம்.

முதலில் 1, 10, 19, 28 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கான தொழில்கள்

1 என்ற எண்ணில் பிறந்தவர்களுக்கு உரிய கோள் சூரியன்.

இவர்கள் பிறவியிலேயே ஆளப் பிறந்தவர்கள். ரிஸ்க் எடுப்பதில் வல்லவர்கள் அதே நேரத்தில் சரியான முடிவு எடுப்பதிலும் கைதேர்ந்தவர்களாக திகழ்பவர்கள்.

எனவே, இந்தத் திகதிகளில் பிறந்தவர்களுக்கு பிசினஸ் தான் சரியான தொழில். இவர்கள் எந்த பிசினஸை செய்தாலும் வெற்றி பெறுவார்கள்.

2, 11, 20, 29 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கான தொழில்கள்

இந்தத் திகதிகளில் பிறந்தவர்களுக்கான கோள் சந்திரன்.

படைப்புகளிலும், புதியதாக உருவாக்குவதிலும் மிகச் சிறந்தவர்களாக இருப்பார்கள். அதுமட்டுமின்றி இந்தத் திகதிகளில் பிறந்தவர்கள் சிறந்த ராஜதந்திரிகளாகவும் இருப்பவர்கள்.

இதனால், இந்தத் திகதிகளில் பிறந்தவர்கள் கலை, நடிப்பு, ஃபேஷன் டிசைனிங் தொழில் செய்தால் வாழ்வில் மிகப் பெரிய நிலையை அடைவார்கள்.

3, 12, 21, 30 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கான தொழில்கள்

இந்தத் திகதிகளில் பிறந்தவர்களுக்கான கோள் வியாழன்.

இயற்கையிலேயே வலிமை உள்ளவர்களாக இருக்கும் இவர்கள் நல்ல மனது கொண்டவர்களாகவும் இருப்பார்கள். வங்கி, பொருளாதாரம் சம்பந்தப்பட்ட பணிகளில் இவர்கள் இருந்தால் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள்.

மேலும் இவர்களுக்குச் சில்லறை வணிகம் செய்யும் தொழிலும் மிகச் சிறப்பாக இருக்கும்.

4, 13, 22, 31 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கான தொழில்கள்

இந்தத் திகதிகளில் பிறந்தவர்கள் வழக்கத்திற்குச் சற்று வேறுபட்டவர்களாகவும், தனிப்பட்ட தன்மை உடையவர்களாக இருப்பார்கள். இந்தத் தேதிகளில் பிறந்தவர்கள் ரிஸ்க் எடுப்பதில் வல்லவர்கள்.

ஆனால் பெரும்பாலும் தவறான முடிவுகளை எடுத்து ஆபத்தையோ பிரச்சனையையோ விலை கொடுத்து வாங்கும் தன்மை உடையவர்கள். ஊக வணிகம் என்று கூறப்படும் பங்கு வர்த்தகம் மற்றும் சூதாட்டம் ஆகியவை இந்தத் திகதிகளில் பிறந்தவர்களுக்குச் சரியான தொழிலாக இருக்கும்.

மேலும் கலை, நடிப்பு ஆகிய துறைகளிலும் இவர்கள் ஜெயிக்க வாய்ப்பு உண்டு.

5, 14, 23 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கான தொழில்கள்

இந்தத் திகதிகளில் பிறந்தவர்கள் சிறந்த முடிவைச் சரியான நேரத்தில் எடுக்கும் தன்மை கொண்டவர்கள். தகவல் தொடர்பு திறன் அதிகம் உள்ள இவர்களுக்குப் பங்கு வர்த்தம் மிகச் சரியான தொழிலாக இருக்கும்.

மற்றவர்களைத் தனது வழிக்குக் கொண்டு வருவதில் வல்லவர்கள். ஒரே விதமான வேலை இவர்களுக்குச் சலிப்பை தரும். ரிஸ்க் எடுத்து தினந்தோறும் பரபரப்பாக இருப்பது இவர்களுக்கு பிடித்தமான ஒன்று. டெக்னாலஜி, விளையாட்டு, மார்க்கெட்டிங், சேல்ஸ் ஆகிய துறைகள் இவர்களுக்குப் பொருத்தமாக இருக்கும்.

6, 15, 24 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கான தொழில்கள்

புகழ் தானாகவே வந்து குவியும் வீனஸ் கிரகத்தைச் சார்ந்த இந்த எண் உடையவர்கள் இயற்கையாகவே பெர்சனாலிட்டியாக இருப்பார்கள். இவர்களுக்கு ஓட்டல், ரெஸ்டாரெண்ட், ஆடம்பரமான அல்லது பொழுதுபோக்கு துறைகளில் நாட்டம் அதிகம் இருக்கும்.

7, 16, 25 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கான தொழில்கள்

இந்த எண்களில் பிறந்தவர்கள் ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள் ஆவதற்கு வாய்ப்பு அதிகம். புதியதாக எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இவர்களிடம் அதிகம் இருக்கும். இவர்களுடைய கண்டுபிடிப்புக்கு உலகமே தலை வணங்கும் அளவுக்கு இவர்களுக்குப் புகழ், பணம் பெருகும். ஆராய்ச்சி, விஞ்ஞானம்தான் இவர்களுக்குரிய சரியான தொழில்.

8, 17, 26 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கான தொழில்கள்

சனி கிரகத்திற்குரிய இந்த எண்களில் பிறந்தவர்கள் ஆரம்ப காலகட்டத்தில் கஷ்டப்படுபவர்கள். அதாவது சுமார் 35 வயது வரை இவர்களுக்குச் சொல்லி கொள்ளும் வகையில் முன்னேற்றம் இல்லாமல் பிற்காலத்தில் மிகப்பெரிய வெற்றியை அடைவார்கள்.

எளிமையாகவும் அதே நேரத்தில் கண்டிப்பு உடையவர்களாகவும் இருக்கும் இவர்களின் கடின உழைப்புக்கு சற்று தாமதமாகத்தான் வெற்றி கிடைக்கும். அரசியல், இரும்பு, உலோகங்கள், ரியல் எஸ்டேட், ஃபைனாஸ் ஆகிய தொழில்கள் இவர்களுக்குப் பொருத்தமாக இருக்கும்.

9, 18, 27 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களுக்கான தொழில்கள்

செவ்வாய் கிரகத்திற்கு உரிய இந்த நபர்கள் விளையாட்டு துறையில் சிறந்து விளங்குவார்கள். உலகின் மிகச் சிறந்த விளையாட்டு வீரர்கள் இந்தத் திகதிகளில் பிறந்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்புத் துறை, கெமிக்கல்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளிலும் இவர்களின் சாதனைகளை பதிப்பார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகணவனை கொன்று காட்டுக்குள் வீசிய மனைவி: அம்பலமான அதிர்ச்சி தகவல்!
Next articleஏழரைச் சனி நடக்கும் மகர ராசிக்காரர்களே! இந்த உங்களுக்கு எப்படி?