நீங்கள் இந்த‌ தேதிகளில் பிறந்தவர்களா? அதிர்ஷ்டசாலிகள்தான்!

0

நீங்கள் இந்த‌ தேதிகளில் பிறந்தவர்களா? அதிர்ஷ்டசாலிகள்தான்!

நியூமராலஜியின் படி விதி எண் 8 சனி பகவானுக்குரியது.

ஆகவே தான் 8, 17 மற்றும் 26 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு சனி பகவானின் சிறப்பான அருளும், ஆசீர்வாதமும் உள்ளது.

இந்த எண்ணைச் சேர்ந்தவர்கள் அதிகம் பேசமாட்டார்கள் மற்றும் தங்களைப் பற்றி வெளியே காட்டிக்கொள்ள விரும்பமாட்டார்கள்.

இவர்கள் தான் உண்டு தன் வேலை உண்டு என்றே இருப்பார்கள்.

சனி கிரகம் எப்படி மெதுவாக நகருமோ, அதேப் போல் இந்த எண்ணைச் சேர்ந்தவர்களும் தங்களின் வாழ்வில் மெதுவாக முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

இவர்கள் வாழ்வில் ஏற்படும் சவால்களைப் பற்றி சிந்திக்கமாட்டார்கள். எந்த ஒரு வேலையை முழு அர்ப்பணிப்புடன் செய்வார்கள். அதனால் அனைத்திலும் வெற்றியைக் காண்பார்கள். இந்த எண்ணைச் சேர்ந்தவர்கள் பிடிவாத குணம் கொண்டவர்கள் மற்றும் மனதில் பட்டதை சற்றும் யோசிக்காமல் செய்வார்கள். யாருடனும் சீக்கிரம் பழக மாட்டார்கள். எனவே இவர்களுக்கு நண்பர்கள் குறைவாகவே இருப்பர்.

விதி எண் 8-ஐ கொண்டவர்களில் நிதி நிலையைப் பற்றி கூற வேண்டுமானால், நிலையானதாக இருக்கும். ஏனெனில் இவர்கள் ஆடம்பரமாக செலவு செய்யமாட்டார்கள். ஆனால் சிறுக சிறுக சேமித்து வைத்து நல்ல தொகையை எப்போதும் கையில் வைத்திருப்பார்கள். இவர்களுக்கு முதலீடுகளில் நம்பிக்கை அதிகம்.

சில காரணங்களால் படிப்பை தொடர முடியாமல் போகும். இந்த விதி எண் 8-ஐ கொண்டவர்கள் அனைத்து வேலைகளிலும் வெற்றி பெறுவார்கள். ஆனால் அதற்கு சிறிது கடின உழைப்பு தேவைப்படும்.

விதி எண் 8 பற்றி நியூமராலஜி சொல்வது என்ன?
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அபரிமிதமான செல்வத்தை பெற்றிருப்பதோடு, சனி பகவானின் முழு ஆசீர்வாதத்தையும் கொண்டிருப்பார்கள். ஏனெனில் நியூமராலஜியின் படி, விதி எண் 8-ன் அதிபதி சனி பகவான் ஆவார்.

எந்த தொழில்களில் வெற்றி கிடைக்கும்?
நியூமராலஜியின் படி, விதி எண் 8-ஐ கொண்டவர்கள் பெரும்பாலும் இன்ஜினியரிங் அல்லது எலக்ட்ரானிக்ஸ் போன்றவற்றுடன் தொடர்புடையவர்கள்.

இவர்கள் நல்ல வியாபாரிகளாக இருப்பார்கள். பொருட்களை சப்ளை செய்வது, இரும்பு மற்றும் எண்ணெய் தொடர்பான தொழில்களை செய்தால், நல்ல ஆதாயங்களைப் பெறுவார்கள்.

மேலும் இந்த எண்ணிற்கு உரியவர்கள் போலீஸ் அல்லது இராணுவம் தொடர்பான தொழில்களில் சிறப்பான வெற்றியைப் பெறுவார்கள்.

மொத்தத்தில், இவர்கள் எந்த தொழிலை செய்தாலும், அதில் வெற்றியைப் பெறுவார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த ராசிக்காரர்களே! எச்சரிக்கையாக இருங்கள்! வார ராசிபலன் (07.08.2022-13.08.2022)!
Next articleபடுத்தவுடன் நிம்மதியான உறக்கம் வேண்டுமா? இப்படி செய்யுங்கள்!