நீங்கள் இதில் எந்த கிழமையில் பிறந்தவர்! உங்கள் குணம் இப்படி தான் இருக்குமாம்!

0

வாரத்தின் 7 நாட்களில் ஒவ்வொரு நாளில் பிறந்தவருக்கும் ஒரு தனிப்பட்ட குணம் உண்டு. ஆகவே எந்த நாளில் பிறந்தவர் எவ்வித குணம் கொண்டிருப்பார் என்பதை இங்கு போர்ப்போம்.

திங்கட்கிழமை

இந்த நாளில் பிறந்தவர்கள் பெரும்பாலும் சுய-உந்துதல் உடையவர்கள். அன்பான சுபாவத்திற்கும், இனிமையான குணத்திற்கும் பெயர் போனவர்கள் இவர்கள்.

இன்பம் மற்றும் துன்பத்தை கருணையோடு கையாளும் தன்மைக் கொண்டவர்கள் இவர்கள். ஆரம்ப காலத்தில் படிப்பை வெறுக்கும் இவர்கள், அடுத்த சில ஆண்டுகளில் வெறுப்பைக் கடந்து ஞானம் பெறுவார்கள்.

செவ்வாய்க்கிழமை

செவ்வாய்க் கிழமையில் பிறந்தவர்கள் மூக்கின் மேல் கோபத்தை வைத்துக் கொண்டிருப்பவர்கள்.

இதன்காரணமாக, நெருக்கமானவர்களிடம் அடிக்கடி சண்டை போடும் நிலை ஏற்படுவதுண்டு. இவர்கள் பெரும்பாலும் சுயநலம் சார்ந்தவர்களாக வாழ்நாள் முழுவதும் இருப்பார்கள்.

புதன் கிழமை

மதம் மற்றும் ஆன்மிகம் சார்ந்த செயல்பாடுகளில் அதிக முனைப்புடன் இருப்பவர்கள் புதன் கிழமை பிறந்தவர்கள்.

கடவுளுக்கு பயப்படும் சுபாவம் இருப்பதால் தீய செயல் மற்றும் எண்ணங்களில் இருந்து விலகி இருப்பார்கள்.

புத்தி கூர்மை அதிகம் இருப்பதால் அவர்கள் வாழ்வை வழி நடத்தும் திறமை அவர்களுக்கு உண்டு. அதனால் அவர்களை ஏமாற்றுவது மிகவும் கடினம்.

வியாழக்கிழமை

வியாழக்கிழமை பிறந்தவர்கள் அறிவாளியாக இருப்பார்கள். சாகச குணம் உள்ளவராகவும் இருப்பார்கள். கடினமான காலங்களை மிகவும் எளிதாக கடந்து வரும் ஆற்றல் இவர்களுக்கு அதிகம் உண்டு.

வாழ்நாள் முழுவதும் இவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் மற்றும் நண்பர்களிடம் இருந்து மிகுந்த அன்பு மற்றும் ஆதரவு பெறுவார்கள். மேலும் இவர்களுக்கு எல்லா நேரமும் அதிர்ஷ்டம் கூடவே இருக்கும்.

வெள்ளிக்கிழமை

எப்போதும் சந்தோஷமாகவும் உற்சாகமாமகவும் இருக்கும் இவர்களை ஒரு கூட்டத்தில் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

இவரக்ளை சுற்றி இருக்கும் மக்களிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவராக வெள்ளிக் கிழமை பிறந்தவர் இருப்பார்.

கடினமான காலகட்டங்களில் மிகவும் அதிக பொறுமை மற்றும் சகிப்புத் தன்மையைக் கடைபிடிப்பதால் கடினமான நபராக உருவாக்கப்படுகிறார்.

சனிக்கிழமை

விவசாயம், வியாபாரம், தொழில்நுட்பம் போன்ற தொழிலில் ஆழ்ந்த ஈடுபாடு உள்ளவர்கள் இவர்கள்.

சிறு வயதில் பல கஷ்டங்களை அனுபவித்து இருப்பதால், வளர்ந்த பிறகு சுற்றி இருக்கும் மக்களிடம் மிகுந்த கவனத்துடன் இருப்பார்கள்.

தனது பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களிடம் கூட ஒரு சற்று விலகியே இருக்கும் சுபாவம் இவர்களுக்கு உண்டு.

ஞாயிற்றுக் கிழமை

பிற்போக்குத் தன்மை அதிகம் உள்ளவர்கள் ஞாயிற்றுக் கிழமையில் பிறந்தவர்கள். வாழ்வின் பிற்பகுதியில் நல்ல நிலையை அடையும் தன்மைக் கொண்டவர்கள் இவர்கள்.

அதிர்ஷ்டம் இவர்கள் பக்கம் எப்போதும் இருக்கும். சமூகத்தின் மீது பரந்த மனப்பான்மைக் கொண்டவர்கள் இவர்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமீன் சாப்பிட ரொம்ப பிடிக்குமா! இந்த பொருளோடு மட்டும் சேர்த்து சாப்பிடாதீங்க! ரொம்ப கஷ்டமாம்!
Next articleஇந்த மூனு ராசிக்காரங்க சொந்த தொழில் செஞ்சா ஓஹோனு வருவாங்களாம்!