லண்டனிலுள்ள பிரபல ஹொட்டல் ஒன்றில் Amelia Oxenford (21) என்னும் இளம்பெண் முழு நிர்வாணமாக தனது காதலனான Alex Buttigiegஐ துரத்திச் சென்று தாக்கும் காட்சிகள் சிக்கின.
அந்த ஜோடி மதுபான விடுதி ஒன்றில் மதுபானம் அருந்திக் கொண்டிருக்கும்போது, Amelia யாருக்கோ குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருந்திருக்கிறார்.
அது யார் என்று விசாரித்துள்ளார். “சிறிது காலம் காதலர்கள் இருவரும் பிரிந்திருக்கும்போது, Amelia வேறொரு நபரை சிறிது காலம் காதலித்திருக்கிறார், அந்த நபருக்குதான் தற்போது அவர் குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது.
இதனால் காதலர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அறைக்கு சென்று பேசிக்கொள்ளலாம் என முடிவு செய்த அவர்கள் அறைக்கு செல்ல, கதவு பூட்டியிருக்கிறார்கள்.
அப்போது Amelia ஆடையின்றி முழு நிர்வாணமாக இருந்திருக்கிறார். Alex ஹொட்டல் ரிசப்ஷனுக்கு சென்று மாற்று சாவி வாங்கி வரச் செல்ல, தன்னை வேண்டுமென்றே நிர்வாணமாக விட்டுச் சென்றதாக எண்ணிய Amelia, Alex திரும்பி வரவும் கோபத்தில் கையிலிருந்த மதுபாட்டிலை உடைத்து அதை வைத்து அவரை தாக்க துரத்தியிருக்கிறார்.
தாக்குதலில் Alexஇன் மூக்கில் காயம்பட்டதோடு, அவரது கண்ணாடியும் நொறுக்கப்பட்டிருக்கிறது. இந்த காட்சிகள் ஹொட்டலில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவில் பதிவாகியுள்ளன. இன்று நீதிமன்றத்திற்கு வழக்கு வந்த நிலையில், CCTV காட்சிகள் திரையிடப்பட்டன.
நீதிபதி வீடியோ காட்சிகளைப் பார்த்தபின், Amelia ஏற்படுத்திய நஷ்டத்திற்காக இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், 12 மாதங்கள் சமூக சேவை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டதோடு 10 நாட்கள் மன நல மையத்தில் சிகிச்சை பெற வேண்டும் என்றும் உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார். அந்த நிர்வாண வீடியோவை வெளியிடுவது முறையாக இருக்காது என்று கூறி, அதை வெளியிட பொலிசார் மறுத்துவிட்டனர்.




