நித்யானந்தா எங்கு உள்ளார் என்ற தகவல் வெளியானது ஐபி முகவரியை கண்டறிந்த பொலிசார் !

0

நித்யானந்தா எங்கு உள்ளார் என்ற தகவல் வெளியானது ஐபி முகவரியை கண்டறிந்த பொலிசார் !

நித்யானந்தா எங்கிருக்கிறார் என்னும் தகவல் விளியாகியுள்ளது. நித்யானந்தா யூடியூப்பில் வீடியோ மூலம் தினமும் பேசும் கணிணியின் ஐபி முகவரியை பொலிசார் ஆய்வு செய்தனர். அதன் மூலம் அந்த முகவரி பனாமா கால்வாய்க்கும், அமெரிக்காவில் உள்ள தீவான வீர்ஜீனியாவில் ஒளிந்திருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவிடம், இந்தியா முறையிட்டு நித்தியானந்தாவை கைது செய்ய மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. தற்போது நித்தியானந்தா அடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். என்னுடைய அடுத்த இலக்கு ஸ்ரீலங்காவில் உள்ள நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம் தான் என்று தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அடுத்ததாக “ராவணன் நேரடியாக கைலாசத்தை தொட்டு தூக்க முயன்றான். கைலாசத்தில் உள்ள சிந்தாமணி மண்டபம் தான் கைலாசத்தின் அருள் பொலிவுக்கு காரணம் என நினைத்தான். உடனே எனக்கு அந்த மண்டபம் வேண்டும் என சிவனிடம் கேட்டான். சிவனும் எடுத்துக்கொள் என்று கூறிவிட்டார். இந்த முட்டாள் ராவணனும் அந்த சிந்தாமணி மண்டபத்தை எடுத்து ஸ்ரீலங்காவில் தான் வைத்தான்” என்று பேசியுள்ளார். சிறீலங்காவுக்கு வந்தால் நித்தி என்ன ஆவார் என்பது தெரியவில்லை !

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த‌ வார ராசி பலன் – டிசம்பர் 15 முதல் 21 வரை !
Next articleரோபோ சங்கர் அவருடைய திருமணத்தின்போது எப்படி இருந்துள்ளார் தெரியுமா? வாயடைத்துபோன ரசிகர்கள் தீயாய் பரவும் புகைப்படம் !