நிகழப்போகும் சுக்கிர வக்கிர பெயர்ச்சியால் 12 ராசிக்காரர்களில் யாருக்கு அதிர்ஷ்டமான ராஜயோக பலன்கள் கிடைக்கும்!
ஜோதிட கணிப்பின் படி சுக்கிரன் செல்வம், பொருள், மகிழ்ச்சி, செழிப்பு, ஆடம்பரங்கள், அன்பு மற்றும் இல்லற சுகத்தின் காரணியாகக் கருதப்படுகிறார். தனுசு ராசியில் 2022 ஜனவரி 29-ம் தேதி தனுசு ராசியில் நேர்கதியில் சுக்கிரன் மீண்டும் பயணம் செய்ய தொடங்குவார்.
இந்த வக்ர நிலையில் இயங்கக்கூடிய சுக்கிரனின் இயக்கத்தால் 12 ராசிகளுக்கு அவர்களின் பொருளாதார ரீதியாக சில மாற்றங்கள், தேக்க நிலைகள் ஏற்படும்.
அதனால், மிகவும் கவனமாக முதலீடு செய்வது நல்லது. ஆடை, அணிகலன் வியாபாரத்தில் மந்தநிலை ஏற்படும். சுக்கிரனின் இந்த வக்ர நிலை காரணமாக 12 ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.
மேஷம் ராசியினர்களுக்கு
மேஷ ராசியினருகளுக்கு பணிச்சுமையால் மனம் கலங்கும். கூட்டுத் தொழில் செய்யக்கூடியவர்கள். பங்குதாரரால் வேலையில் பிரச்ச்னைகளும், கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் போகலாம்.
எதிரிகள் உங்கள் முயற்சிகளைத் தடுக்க முயல்வார்கள். மன உறுதியுடன் சூழலை எதிர்கொள்ளவும். குடும்பச் சூழல் எந்த பெரிய பிரச்னைகளும் இல்லாமல் இருப்பது மனம் ஆறுதல் தருவதாக இருக்கும்.
ரிஷபம் ராசியினர்களுக்கு
ரிஷப ராசியினர்களுக்கு பணியிடத்தில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். சில சந்தர்ப்பங்களில், உங்கள் செலவுகள் கட்டுப்படுத்தமுடியாமல் போகலாம். வீண் செலவு அதிகரிக்கலாம்.
மிதுனம் ராசியினர்களுக்கு
மிதுன ராசியினர்களுக்கு வியாபாரத்தில் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். பணியில் இருக்கும் சக பெண்களுடன் வாக்குவாதங்கள் தவிர்ப்பது அவசியம். ஒத்துழைப்பின்மை ஏற்படலாம். சுக்கிரன் அமைப்பால் புதிய வேலை கிடைப்பதில் சிரமம் ஏற்படும்.
கடகம் ராசியினர்களுக்கு
கடக ராசியினர்களுக்கு உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் நீங்கள் நினைத்த லாபத்தை அடைய சரியான வாய்ப்புகள் அமையாது. உங்கள் வேலையை மிகவும் எரிச்சல் மனப்பான்மையுடன் செய்வீர்கள். மாணவர்கள் கவன சிதறலும், குழப்ப நிலையில் இருப்பார்கள்.
சிம்மம் ராசியினர்களுக்கு
சிம்ம ராசியினர்களுக்கு பிள்ளைகள் தொடர்பான சில பிரச்னைகள் சந்திக்க வேண்டியதிருக்கும். நீங்கள் வியாபாரம், தொழில் செய்பவராக இருந்தால் உங்கள் இலக்கை அடைவதில் சிக்கல் ஏற்படும். மாணவ, மாணவிகள் கல்வியில் கவனம் தேவை. உத்தியோகத்தில் பணிச்சுமை ஏற்படலாம்.
கன்னி ராசியினர்களுக்கு
கன்னி ராசியினர்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொழில் ரீதியாகவும், உத்தியோகத்திலும் சிறப்பாக செயல்படுவீர்கள். மேலதிகாரிகள் உங்களின் செயலைப் பாராட்டுவதும், ஆதரவாகவும் இருப்பார்கள். ஊக்கம் அளிப்பார்கள்.
துலாம் ராசியினர்களுக்கு
துலாம் ராசியினர்களுக்கு செலவைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படும். ஆடம்பர செலவு செய்வீர்கள். மனைவியுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எதிர்பார்த்த பணவரவு வராமல் போகலாம். உங்களின் கடின உழைப்புக்கு சரியான பலன் கிடைப்பது அரிதாக இருக்கும்.
விருச்சிகம் ராசியினர்களுக்கு
விருச்சிக ராசியினர்களுக்கு உங்களின் செலவுகளைக் கட்டுப்படுத்தவும். மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை. நினைத்த வெற்றியைப் பெற, உங்களின் நேரத்தின் மதிப்பை உணர்ந்து செயல்படுவது அவசியம்.
உங்கள் நேரத்தை வீணடிப்பதால், அவசர அவசரமாக வேலையை செய்துமுடிக்க வேண்டியது இருக்கும்.
தனுசு ராசியினர்களுக்கு
தனுசு ராசியினர்களுக்கு உங்களின் எதிர்காலம் குறித்து சரியாக திட்டமிடவும். அதை செயல்படுத்த முழு கவனம் செலுத்துவது அவசியம். ஆசையின் காரணமாக அவசர முடிவை எடுக்க வேண்டாம். உங்கள் முடிவுக்கு முன் நிதானம் தேவை. வேலை தொடர்பான தேவையற்ற வீண் அலைச்சல்கள் சந்திக்க வேண்டியிருக்கும்.
மகரம் ராசியினர்களுக்கு
மகர ராசியினர்களுக்கு சோம்பல் அதிகரிக்கும். வேலையை மெதுவாக முடிப்பீர்கள். குழந்தைகள் வழியில் சிறு பிரச்னைகள் வரலாம். ஏற்றுமதி, இறக்குமதியில் தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பயணங்களின் போது எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம்.
கும்பம் ராசியினர்களுக்கு
கும்ப ராசியினர்களுக்கு வீடு, மனை மற்றும் ரியல் எஸ்டேட் தொடர்பான பணிகளில் தாமதம் ஏற்படும். திருமண வாழ்வில் சில பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
மன வருத்தம் ஏற்படும். மாணவர்கள் படிப்பில் கவனக்குறைவுடன் இருப்பார்கள். பணிச்சுமையால் வேலையை முடிப்பதில் கடினம் ஏற்படும்.
மீனம் ராசியினர்களுக்கு
மீனம் ராசியினர்களுக்கு பயணங்களால் சிரமமும், உடல் நலப் பிரச்னைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களுடன் சில கருத்துவேறுபாடுகள் வரலாம். வேலையில் தடைகள் ஏற்படும்.
எந்த ஒரு செயலிலும் சரியான திட்டமிடலுடன் செயல்படுவது அவசியம். அதீத நம்பிக்கை உங்களுக்கு மன வருத்தத்தைத் தரலாம்.