நாளாந்தம் மயங்கி விழும் மாணவர்கள்: மோகன் வீரசிங்க தெரிவிப்பு!

0

நாளாந்தம் மயங்கி விழும் மாணவர்கள்: மோகன் வீரசிங்க தெரிவிப்பு!

ஒவ்வொரு நாளும் காலை பாடசாலைகளில் நடைபெறும் கூட்டங்களில் கணிசமான எண்ணிக்கையிலான மாணவர்கள் மயங்கி விழுவதாக அதிபர்களின் சங்க பொதுச் செயலாளர் மோகன் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களின் வருகை 30-40 வீதத்தினால் குறைந்துள்ளதாக அதிபர்கள் தெரிவிக்கின்றனர். உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறையே பாடசாலை மாணவர்களின் வருகை குறைவதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாகப் பிள்ளைகளை பாடசாலைக்குச் அனுப்ப முடியாத குடும்பங்கள் கிராமப்புறங்களிலும், நகரங்களிலும் பெருமளவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் 60% பாடசாலை மாணவர்கள் மதிய உணவை எடுத்து வருவதில்லை என தெரிவித்த அவர், போக்குவரத்து பிரச்சினையால் பாடசாலை மாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
Next articleகோவிட் வைரஸ் தொடர்பாக‌ வைத்திய ஆலோசகர் எச்சரிக்கை!