நடிகர் ராதா ரவி தமிழ் சினிமாவின் மூத்த நடிகர். பல படங்களில் நடித்து திறமை காட்டிய அவர் அரசியல் விசயங்களிலும் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் அவர் நயன்தாரா நடித்த கொலையுதிர்காலம் படத்தின் விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. அவருக்கு எதிர்ப்புகளும் கிளம்பியது.
நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் கடும் கோபத்தில் இருக்கிறார். மேலும் நயன்தாராவின் தயாரிப்பு நிறுவனமான KJR ஸ்டூடியோஸ் தங்கள் படங்களில் இனி ராதா ரவி நடிக்க வைக்க போவதில்லை என அறிக்கை வெளியிட்டனர். நடிகர் சங்கமும் அவருக்கு கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில் நான் எதற்கு பயப்பட வேண்டும், நான் நடிப்பதை நிறுத்த நீங்கள் யார்? கட்சியிலிருந்து என்னை நீக்கலாம், ஆனால் மக்கள் மனதில் நிரந்தரமாக இருப்பேன் என அவர் தற்போது கூறியுள்ளார்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: