காலையில் பற்களை துலக்கும் முன் நாக்கை கவனிக்க வேண்டும். ஏனெனில் நாக்கில் உள்ள அழுக்குகள் உங்கள் உடலில் பல விதமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
எனவே நாக்கை சுத்தமாக வைப்பது என்பது நமது கடமை.மேலும் நாக்கில் பாக்டீரியாக்கள் பெருகி அந்த இடத்தில் இறந்த செல்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் தோன்றும் வெள்ளைப்படலத்தை எப்படி நீக்க வேண்டும் என பார்ப்போம்
தேங்காய் எண்ணெய்
தினமும் காலையில் எழுந்ததும் 1 டீ தேங்காய் எண்ணெயை கொண்டு உங்களின் வாயை கொப்பளியுங்கள். இப்படி செய்வதால் தேங்காய் எண்ணெய்யில் ஆன்டி பாக்டீரியல் தன்மை அதிகம் உள்ளதால் இவை வாயில் பெருகி உள்ள கெட்ட பாக்டீரியாக்களை கொல்லும்.
கற்றாழை ஜூஸ்
கற்றாழை ஜூஸில் பூஞ்சை எதிர்ப்பு பொருள், ஆன்டி பாக்டீரியல் மற்றும் அழற்சியை எதிர்ப்பு பொருள் உள்ளதால் தினமும் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜூஸைக் கொண்டு வாயை சுத்தப் படுத்தலாம்.
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடா நாக்கில் உள்ள வெள்ளை படலத்தை போக்க உதவுகிறது. எனவே பேக்கிங் சோடா மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்து இந்த பேஸ்ட்டை பிரஷ்ஷில் வைத்து 2 நிமிடங்கள் நாக்கை சுத்தம் செய்யுங்கள்.
லெமன் ஜூஸ்
பேக்கிங் சோடா மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்து குழைத்து இந்த பேஸ்ட்டை பிரஷ்ஷில் வைத்து 2 நிமிடங்கள் நாக்கை சுத்தம் செய்யதால் நாக்கில் உள்ள அழுக்குகள் போய் விடும்.
கடல் உப்பு
கடல் உப்பு நாக்கில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது. சிறுதளவு கடல் உப்பை எடுத்து உங்கள் நாக்கில் தடவி 3 நிமிடங்கள் நாக்கை நன்றாக சுத்தம் செய்யுங்கள். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
மஞ்சள்
மஞ்சளில் உள்ள ஆன்டி பாக்டீரியல் பொருள் நாக்கில் உள்ள வெள்ளை படலத்தை போக்குகிறது. 1 டீ ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறுதளவு லெமன் ஜூஸ் சேர்த்து நன்றாக கலக்கி 3 நிமிடங்கள் ப்ரஷ் செய்து பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.